Page Loader
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரினை கைது செய்த இலங்கை கடற்படை 
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரினை கைது செய்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரினை கைது செய்த இலங்கை கடற்படை 

எழுதியவர் Nivetha P
Jun 20, 2023
02:22 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடித்தார்கள் என்னும் குற்றச்சாட்டினை வைத்து அவர்களை கைது செய்வது இலங்கை கடற்படையின் வழக்கமான ஓர் செயலாகும். இதுவரை நூற்றுக்கணக்கான படகுகளையும் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகள் பறிபோன காரணத்தினால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசு இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை மீட்க தேவையான முயற்சிகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்,கடந்த 2 மாதங்களாக மீன்ப்பிடி தடைக்காலம் அமலில் இருந்ததால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் இருந்தனர். இந்த தடைக்காலமானது அண்மையில் முடிவுற்ற நிலையில் மீனவர்கள், கடந்த 15ம்தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார்கள் என்று தெரிகிறது.

கைது 

இலங்கை கடற்படை உயரதிகாரிகள் அனுமதித்தால் விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் 

இதனைத்தொடர்ந்து நேற்று(ஜூன்.,19)ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க இலங்கைக்கு அருகிலுள்ள நெடுந்தீவு என்னும் பகுதியில், தங்கச்சிமடத்தினை சேர்ந்த அந்தோணி என்பவருக்கு சொந்தமான படகில் சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் சென்ற படகு பழுது காரணமாக பாறையில் சிக்கியது. அந்தநேரம் பார்த்து அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வர மீனவர்கள் 9 பேரினை கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். இது குறித்து ராமேஸ்வர மீனவர்கள் சங்க தலைவர் ஜேசுராஜா கூறுகையில், "படகின் எஞ்சின் கோளாறு காரணமாக கரை ஒதுங்கியதால் இலங்கை கடற்படை உயரதிகாரிகள் அனுமதி அளிக்கும்பட்சத்தில் மீனவர்களை விடுதலை செய்ய வாய்ப்புள்ளது என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.