Page Loader
ஆருத்ரா வழக்கில் 3000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தயார் - குற்றப்பிரிவு போலீசார் தகவல் 
ஆருத்ரா வழக்கில் 3000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தயார் - குற்றப்பிரிவு போலீசார்

ஆருத்ரா வழக்கில் 3000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தயார் - குற்றப்பிரிவு போலீசார் தகவல் 

எழுதியவர் Nivetha P
Jun 20, 2023
05:32 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலம், சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டுவந்தது. இந்நிறுவனத்தில் ரூ.1.லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.36ஆயிரம் வட்டி வழங்கப்படும் என்ற மோசடி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதனை நம்பிய கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 9,255 வாடிக்கையாளரிடம் இந்நிறுவனம் ரூ.2,438கோடி பெற்று மோசடி செய்தது. இதுகுறித்து வழக்குப்பதிவுச்செய்த பொருளாதார குற்றப்பிரிவுப்போலீசார் இந்நிறுவனத்தின் இயக்குனராக செயல்பட்டுவந்த ஹரிஸ் மற்றும் மாலதி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஹரிஸ் கொடுத்த வாக்குமூலத்தின்படி, பாஜக'வில் பொறுப்பினைப்பெற வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பணத்தினை பயன்படுத்தியதாக கூறியுள்ளார். இதுப்பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், சினிமா நடிகரும்-பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கும் இதில் தொடர்புள்ளது என்று தெரியவந்தது.

விசாரணை 

இவ்வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் 

இதனை தொடர்ந்து இந்த நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்ட 61 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ரூ.6.35 கோடி பணம், ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே போல் 22 கார்கள், வங்கிக்கணக்கில் உள்ள ரூ.96 கோடி டெபாசிட் பணம், ரூ.103 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஆகியன முடக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளார்கள். இதுவரை இந்த வழக்கில் 21 பேரினை கைது செய்துள்ள குற்றப்பிரிவு போலீசார், விசாரணையினை முடித்து 3000 பக்க அளவிலான குற்றப்பத்திரிகையினை தயார் செய்துள்ளது. இந்த வழக்கு குறித்து விசாரணை நடக்கும் பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இந்த 3000 பக்க குற்றப்பத்திரிகையினை போலீசார் தாக்கல் செய்யவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.