Page Loader
சென்னை தி.நகர் பள்ளியில் சத்துமாவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் 
சென்னை தி.நகர் பள்ளியில் சத்துமாவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

சென்னை தி.நகர் பள்ளியில் சத்துமாவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் 

எழுதியவர் Nivetha P
Jun 21, 2023
01:11 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் ரோடு பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், போன்ற மாவட்டங்களில் இருந்தும் இப்பள்ளிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து படிப்பதால் இங்கு விடுதி வசதியும் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் தான் கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில், மாணவர் ஒருவர் தனது வீட்டில் இருந்து கொண்டு வந்த சத்துமாவில் தேங்காய் எண்ணெய் ஊற்றி நேற்று முன்தினம் மாலை வேளையில் தனது 5 நண்பர்களுடன் இணைந்து சாப்பிட்டார் என்று கூறப்படுகிறது. அதனை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே 6 பேரும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கீழே சுருண்டு விழுந்து மயங்கினர்.

மயக்கம் 

தேங்காய் எண்ணெய் என்று நினைத்து பேன் எண்ணெயை ஊற்றி உண்ட மாணவர்கள் 

அதனை தொடர்ந்து அங்கிருந்த மற்ற மாணவர்கள் விடுதி காப்பாளருக்கு தகவலளித்துள்ளனர். அதன் பேரில், அந்த 6 மாணவர்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர். தகவலறிந்து அங்கு வந்த தேனாம்பேட்டை போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சத்துமாவு கொண்டு வந்த மாணவரின் பெற்றோர் அவரது தலையில் பேன் அதிகமாக இருந்ததால் தேங்காய் எண்ணெய் பாட்டிலில் பேன் எண்ணெயினை ஊற்றி கொடுத்துள்ளார்கள். மாணவர்கள் அதனை தேங்காய் எண்ணெய் என்று தவறுதலாக சாத்துமாவில் ஊற்றி சாப்பிட்டதால் தான் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 மாணவர்களும் உடல்நிலை தேரி நேற்று(ஜூன்.,20) காலை நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.