ராஜ்நாத் சிங் சென்னை வருகை - பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை
செய்தி முன்னோட்டம்
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(ஜூன்.,20)சென்னைக்கு வருகை தரவுள்ளார்.
அதன்படி, இன்று மாலை 4மணியளவில் சென்னைக்கு வந்தடையும் அவர், 4.40மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு தாம்பரம் இரும்புலியூரில் டிடிகே மைதானத்திற்கு சென்றடைகிறார்.
அங்கு நடக்கவிருக்கும் பாஜக தலைமையிலான 9 ஆண்டுக்கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இதனிடையே, வரும் 2024ம்ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவை தேர்தல் குறித்து பாஜக.மாநிலத்தலைவர் அண்ணாமலை மற்றும் பிற முக்கியத்தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சாதனை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் வந்தநிலையில், தற்போது ராஜ்நாத்சிங் வருகை தருவது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
இன்று சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங் சென்னை வருகை : முக்கியத்துவம் என்ன? #RajnathSingh #BJP #News18TamilNadu pic.twitter.com/hz5XJOPWmU
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 20, 2023