
தமிழகத்தில் 500 சில்லறை மதுபான கடைகள் மூடப்படும் - டாஸ்மாக் நிர்வாகம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் தற்போது 5,329 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.
இதில் 500 சில்லறை மதுபான கடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அண்மையில் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது 500 சில்லறை மதுபான கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் 20ம்தேதி மதுபானக்கடைகளை மூடுவதற்கான அரசாணை எண்.140,உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் வெளியிடப்பட்டது.
அந்த அரசாணையினை செயல்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதுமுள்ள 500 சில்லறை மதுபானக்கடைகள் கண்டறியப்பட்டு ஜூன் 22ம் தேதி மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே நாளை முதல் 500 சில்லறை மதுபானக்கடைகள் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING நாளை முதல் 500 சில்லறை மதுபான கடைகள் மூடப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு#TASMAC #TNGovt #News18TamilNadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/p4Lco0sKxU
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 21, 2023