Page Loader
புதிய சுற்றுப் பணிநீக்கத்தில் 1000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த பைஜூஸ் நிறுவனம்
1000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த பைஜூஸ் நிறுவனம்

புதிய சுற்றுப் பணிநீக்கத்தில் 1000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த பைஜூஸ் நிறுவனம்

எழுதியவர் Prasanna Venkatesh
Jun 20, 2023
10:02 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸ் தங்கள் நிறுவனத்திலிருந்து 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது. தங்கள் நிறுவனத்திலுள்ள அனைத்து துறைகளில் இருந்து மூத்த பணியாளர்களை அந்நிறுவனம் இம்முறை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிநீக்கத்தைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 50,000 என்ற அளவில் இருக்கிறது. செலவுகளைக் குறைக்கவும், லாபத்தைப் பெருக்கவுமே இந்த பணிநீக்க முடிவை பைஜூஸ் நிறுவனம் எடுத்திருப்பதாக அந்நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சிலர் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே கிட்டத்தட்ட 2,500 ஊழியர்களை தங்கள் நிறுவனத்திலிருந்து அந்நிறுவனம் பணிநீக்கம் செய்தது. மார்ச் 2023-க்குள் லாரகரமான நிறுவனமாக மாற இந்த பணிநீக்கம் அவசியம் என அந்நிறுவனம் தெரிவித்ததாக பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தெரிவித்திருந்தார்கள்.

பைஜூஸ்

புதிய பணிநீக்க அறிவிப்பு: 

முந்தைய பணிநீக்கத்தைத் தொடர்ந்து, அடுத்து ஒரு பணிநீக்கம் தங்கள் நிறுவனத்தில் நடைபெறாது என பைஜூஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஊழியர்களுக்கு அனுப்பிய ஒவ்வொரு மின்னஞ்சலிலும் தெரிவித்ததாக அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். கடந்த ஜூலை 16-ம் தேதி அந்நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அன்றைய தினம் தான் நிறுவனத்தின் கடைசி நாள் என்றும், அவர்களை தாங்களாகவே ராஜினாமா செய்துவிட்டதாக கடிதம் கொடுக்க வேண்டும் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறைந்த சம்பளத்தில் புதிய ஊழியர்கள் பணிநியமனம் செய்யப்பட்ட பின்பு, அதிக சம்பளம் பெறும் மூத்த ஊழியர்களை பைஜூஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்திருப்பதாக அதன் ஊழியர்கள் குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.