Page Loader
சர்வதேச யோகா தினம் 2023: யோகாவும் அதன் வரலாறும் 
'யோகா' என்ற வார்த்தை முதன்முதலில் ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சர்வதேச யோகா தினம் 2023: யோகாவும் அதன் வரலாறும் 

எழுதியவர் Sindhuja SM
Jun 21, 2023
03:30 pm

செய்தி முன்னோட்டம்

2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. மில்லியன் கணக்கான மக்களை சென்றடைந்திருக்கும் இந்த பழமையான நடைமுறையின் வரலாற்றை இப்போது தெரிந்துகொள்ளலாம். 'யோகா' என்ற வார்த்தை முதன்முதலில் ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது கிமு 1500இல் எழுதப்பட்ட ஒரு நூலாகும். கிமு 1200-1000 ஆண்டுகளுக்கு இடையே எழுதப்பட்ட அதர்வ வேதத்தில், மூச்சைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பு, சிந்து சமவெளி நாகரீகம் செழித்தோங்கிய காலகட்டத்திலேயே(கிமு 2700), யோகா பயிற்சிகள் நடைமுறையில் இருந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், யோகா பல்லாயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

பிபிடிபி

2,000 ஆண்டுகளுக்கு முன்பு  பதஞ்சலி யோகாவை ஆவணப்படுத்தினார் 

மிக நீண்ட வரலாற்றை கொண்ட யோகா எந்த காலகட்டத்தில் தோன்றியது என்பது சரியாக தெரியவில்லை என்றாலும், 2,000 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக பதஞ்சலி என்ற ஞானி இந்த நடைமுறையை ஆவணப்படுத்தி இருக்கிறார். "யோக சூத்திரங்கள்" என்று அழைக்கப்படும் அவரது நூல், தற்போது பின்பற்றப்படும் யோகா பயிற்சிகளின் அடித்தளமாகும். பதஞ்சலி எழுதிய சூத்திரங்கள், மன அமைதியை ஏற்படுத்துவதற்கும் நிறைவை அடைவதற்கும் மதிப்புமிக்க வழிகாட்டுதலை வழங்குகின்றன. பதஞ்சலியின் அந்த போதனை புத்தகத்தை காலங்காலமாக யோகிகள் பாதுகாத்து வருகின்றனர். அப்படிப்பட்ட யோகாவை மேற்கத்திய உலகிற்கு அறிமுகப்படுத்தியதில் சுவாமி விவேகானந்தர் முக்கிய பங்கு வகித்தார். மேலும், திருமலை கிருஷ்ணமாச்சார்யா நவீன யோகாவின் மிக முக்கியமான குருக்களில் ஒருவராவார். இவரைத் தான் நாம் நவீன யோகாவின் தந்தை என்று அழைக்கிறோம்.