ஆஷஸ் 2023 : 75 ஆண்டுகளில் மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்து வென்ற ஆஸ்திரேலியா
செய்தி முன்னோட்டம்
ஆஷஸ் 2023 தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) கடைசி நாளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
முன்னதாக, 281 என்ற எளிதான இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஒரு கட்டத்தில் 8 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்து போராடியது.
9வது விக்கெட்டுக்கு பாட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லயன் 55 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தனர்.
இதன் மூலம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
மேலும் 1948க்கு பிறகு 75 ஆண்டுகளில் ஆஷஸில் மிகப்பெரிய இலக்கை சேஸ் ஆஸ்திரேலிய அணி சேஸ் செய்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி
Australia pulled off their highest successful Ashes chase since 1948 😲#ENGvAUS | #Ashes pic.twitter.com/HH2Dxr1RCx
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 20, 2023