Page Loader
பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு 
இதுதான் நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் மிக உயர்ந்த வரவேற்பாகும்.

பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு 

எழுதியவர் Sindhuja SM
Jun 21, 2023
08:40 am

செய்தி முன்னோட்டம்

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடிக்கு நியூயார்க்கில் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஏராளாமான அமெரிக்க-இந்தியர்கள் பிரதமர் மோடியை வரவேற்க விமான நிலையத்தில் கூடியிருந்தனர். அவர்களுடன் கைகுலுக்கி பிரதமர் மோடி நன்றி தெரிவித்து கொண்டார். அதன் பிறகு, பிரதமர் மோடியின் ஹோட்டலுக்கு வெளியேவும் ஒரு பெரும் கூட்டம் அவருக்காக காத்திருந்தது. அவர்கள் ஆடியும் பாடியும் பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர். நோபல் பரிசு பெற்றவர்கள், பொருளாதார வல்லுநர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள், சுகாதாரத் துறை வல்லுநர்கள் உட்பட 24 "சிந்தனைத் தலைவர்களை" பிரதமர் இப்போது சந்தித்து வருகிறார். அவர் ஏற்கனவே டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், எழுத்தாளர் ஜெஃப் ஸ்மித், மைக்கேல் ஃப்ரோமான் போன்றவர்களை சந்தித்துவிட்டார்.

சிட்டிசன்

நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் மிக உயர்ந்த வரவேற்பு

மேலும், பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். வானியற்பியல் விஞ்ஞானி நீல் டி கிராஸ் டைசன், கிராமி விருது பெற்ற இந்திய-அமெரிக்க பாடகர் ஃபால்குனி ஷா, உலக வங்கியின் மூத்த துணைத் தலைவர் பால் ரோமர், அமெரிக்க பில்லியனர் முதலீட்டாளர் ரே டாலியோ, அமெரிக்க மருத்துவரும் நோபல் பரிசு பெற்றவருமான மூலக்கூறு உயிரியலாளர் டாக்டர் பீட்டர் அக்ரே மற்றும் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கலைஞர் சந்திரிகா டாண்டன் ஆகியோர் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளனர். பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்ட மூன்றாவது இந்தியர் ஆவார். இதுதான் நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் மிக உயர்ந்த வரவேற்பாகும்.