ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமன் நியமனம்
பாரத ஸ்டேட் வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குநர் சுவாமிநாதன் ஜானகிராமன் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் துணை நிலை ஆளுநர் பதவியில் சேர்ந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை அந்தப் பதவியில் செயல்படுவார். ஆர்பிஐ சட்டப் படி, ரிசர்வ் வங்கியில் நான்கு துணை ஆளுநர்கள் இருக்க வேண்டும். இதில் ஒரு பதவி வணிக வங்கியாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே துணை ஆளுநராக இருந்த எம்.கே.ஜெயின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவருக்கு பதிலாக சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். மைக்கேல் தேபப்ரதா பத்ரா, எம் ராஜேஷ்வர் ராவ் மற்றும் டி ரபி சங்கர் ஆகியோர் இதர துணை ஆளுநர்கள் ஆவர்.