LOADING...
ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்டதாக கூறிய விவகாரம் - ராணுவத்திற்கு அறிக்கை அனுப்பிய காவல்துறை 
ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்டதாக கூறிய விவகாரம் - ராணுவத்திற்கு அறிக்கை அனுப்பிய காவல்துறை

ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்டதாக கூறிய விவகாரம் - ராணுவத்திற்கு அறிக்கை அனுப்பிய காவல்துறை 

எழுதியவர் Nivetha P
Jun 21, 2023
11:06 am

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தில் அவில்தாரராக பணிபுரிந்து வருபவர் பிரபாகரன். இவரது மனைவி கீர்த்தி திருவண்ணாமலை கலசப்பாக்கம் படவேடு ரேணுகாம்பாள் கோயில் அருகேயுள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் பேன்சி கடை ஒன்றினை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபாகரன் அண்மையில் ஒரு வீடியோ பதிவினை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். அதில் அவர், தனது மனைவி நடத்தி வரும் கடையில் சில மர்ம நபர்கள் நுழைந்து நிலப்பிரச்சனை காரணமாக கடையினை அடித்து நொறுக்கியதோடு, 120க்கும் மேற்பட்டவர்கள் தனது மனைவியினை அரைநிர்வாணமாக்கி தாக்கியதாக கண்ணீர் விட்டு கதறியிருந்தார். இந்த வீடியோப்பதிவு வைரலான நிலையில், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.கார்த்திகேயன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். விசாரணை துவங்கப்பட்ட நிலையில் பிரபாகரன் மனைவி தாக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.

அறிக்கை 

ராணுவ வீரர், மனைவி உள்ளிட்ட 4 பேர் தலைமறைவு 

இதனிடையே பிரபாகரன் தனது உறவினரோடு பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பகீர் தகவல்களை வெளியே கொண்டுவந்தது. அதில் அவர், "நடந்ததை மிகைப்படுத்தி கூற வேண்டும்" என்று பேசியிருந்தார். இந்நிலையில், தற்போது திருவண்ணாமலை காவல்துறை ராணுவத்திற்கு ஓர் விரிவான அறிக்கையினை அனுப்பி வைத்துள்ளது. அதில் ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்டதாக அளித்த புகாரின்பேரில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ராணுவ வீரர் பிரபாகரனுடன் சதித்திட்டம் தீட்டிய அவரது உறவினர் வினோத் ஏற்கனேவே கைது செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. மேலும், ஆடியோ பதிவு வெளியாகி உண்மைகள் தெரியவந்த நிலையில், ராணுவ வீரர், அவரது மனைவி உள்ளிட்ட 4 பேர் தலைமறைவாகியுள்ளனர் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.