Page Loader
ராணுவ வீரர் மனைவி மானபங்கப்படுத்திய விவகாரம் - பகீர் ஆடியோ பதிவு வெளியீடு 
ராணுவ வீரர் மனைவி மானபங்கப்படுத்திய விவகாரம் - பகீர் ஆடியோ பதிவு வெளியீடு

ராணுவ வீரர் மனைவி மானபங்கப்படுத்திய விவகாரம் - பகீர் ஆடியோ பதிவு வெளியீடு 

எழுதியவர் Nivetha P
Jun 13, 2023
06:52 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்தியா ராணுவத்தில் அவில்தாரராக பணிபுரிபவர் பிரபாகரன். இவர் அண்மையில் ஒரு வீடியோப்பதிவினை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். அதில், தனது மனைவி நடத்திவரும் கடையில் சில மர்மநபர்கள் நுழைந்து நிலப்பிரச்சனை காரணமாக கடையினை அடித்து நொறுக்கியதோடு, 120க்கும் மேற்பட்டவர்கள் தனது மனைவியினை அரைநிர்வாணமாக்கி தாக்கப்பட்டதாக கண்ணீர்விட்டு கதறியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி காவல்துறையினரும் விசாரணையில் இறங்கினர். இந்நிலையில் ராணுவவீரர் பிரபாகரன் தனது நண்பர் வினோத் என்பவரோடு பேசும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி பலத்திடுக்கிடும் தகவல்களை வெளியே கொண்டுவந்துள்ளது. அந்த ஆடியோவில், "நடந்த விவகாரத்தினை மிகைப்படுத்தி கூறவேண்டும். இந்த விவகாரத்தால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடக்கவுள்ளது. என்னிடம் இதுவரை பல அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் பேசியுள்ளார்கள்" என்று பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post