
புதிய 'ஹைலைட்ஸ் டேப்' வசதியை அறிமுகப்படுத்தியிருக்கும் ட்விட்டர்
செய்தி முன்னோட்டம்
ட்விட்டர் நிறுவனமானது ட்விட்டர் பயனர்களுக்காக புதிதாக 'ஹைலைட்ஸ் டேப்' என்ற வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கிட்டத்தட்ட இன்ஸ்டாகிராமில் இருக்கும் ஹைலைட்டஸ் வசதியில் கொஞ்சம் மாற்றம் செய்து ஹைலைட்ஸ் டேபாக வெளியிட்டிருக்கிறது ட்விட்டர்.
கடந்த சில மாதங்களாக இந்த வசதியை குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் வெளியிட்டு சோதனை செய்து வந்தது அந்நிறுவனம். அதனைத் தொடர்ந்து தற்போது உலகளவில் ட்விட்டர் பயனர்கள் அனைவருக்கும் அதிகாரப்பூர்வமாக இந்த வசதியை தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.
இந்த வசதியின் மூலம் பயனர்கள் தாங்கள் பதிவிட்ட ட்வீட்டகளில் முக்கியமான ட்வீட்டகளை மட்டும் ஹைலைட்ஸ் என்ற தனி டேப்-ல் காட்ட முடியும்.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றிய பிறகு பல புதிய வசதிகளை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர்
ட்விட்டர் ப்ளூ சந்தா:
மேற்கூறிய புதிய வசதியானது அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், அதனை ட்விட்டர் ப்ளூ பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
ட்விட்டர் ப்ளூவுக்கு சந்தா செய்யாதவர்களுக்கு இந்த புதிய வசதியானது காட்டப்படும். ஆனால், அதனை க்ளிக் செய்தால் நேரடியாக ட்விட்டப் ப்ளூ சந்தா பக்கத்திற்கு எடுத்துச் செல்கிறது.
ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்கள் எண்ணிக்கையை உயர்த்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார் எலான் மஸ்க். அதற்காக ட்விட்டரில் வழங்கப்பட்டு வரும் பல்வேறு வசதிகளை ட்விட்டர் ப்ளூ கட்டண முறைக்குள் கொண்டு சென்றும், இலவச பயனர்களுக்காக வழங்கப்படும் வசதிகளை குறைத்தும் வருகிறார் அவர்.
இனி, இன்னும் பல புதிய வசதிகள் ட்விட்டரில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றையும் ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்கள் பயன்படுத்தும் வகையிலேயே ட்விட்டர் வழங்கும் எனத் தெரிகிறது.
ட்விட்டர் அஞ்சல்
ட்விட்டரின் புதிய 'ஹைலைட்ஸ் டேப்' வசதி
“Highlights Tab” is now live on Twitter. You can now showcase your favorite tweets on your profile. pic.twitter.com/nPz7DfNeIZ
— DogeDesigner (@cb_doge) June 18, 2023