விஜய் நடிக்கும் லியோ படத்தின் பாடல் ப்ரோமோ வெளியீடு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார், அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். அதாவது விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி இப்படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' என்னும் பாடல் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அப்பாடலின் ப்ரோமோ வீடியோ பதிவினை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. விஜய் பாடியுள்ள இப்பாடலின் ப்ரோமோ, வெளியான சில நொடிகளிலேயே பல்லாயிரக்கணக்கான வியூஸ்களை கடந்துள்ளது. 33 வினாடிகள் கொண்ட இப்பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது விஜய் ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.