உலக மொழியான 'இசை'யின் தினம் இன்று
உலக இசை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள 120 நாடுகள், கச்சேரிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் இந்த தினத்தை கொண்டாடுகின்றன. இசையை இளைய தலைமுறையினருக்கான் கலை வடிவமாக மாற்றுவதே உலக இசை தினத்தின் நோக்கமாகும். பொதுவாக, இந்த நாளில் இசை ஆர்வலர்கள் பார்வையாளர்களுக்கு முன் இசை கலை மீது தங்களுக்கு இருக்கும் மரியாதையை வெளிப்படுத்துவார்கள். 1982 ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற Fete de la Musique இசை விழாவின் மூலமாக தான் உலக இசை தினம் கொண்டப்பட தொடங்கியது, என நம்பப்படுகிறது.
உலக இசை தினத்தின் வரலாறு
1981 இல் பிரெஞ்சு கலாச்சார அமைச்சரான ஜாக் லாங், இசை தினத்தை கொண்டாடும் யோசனையை உருவாக்கினார் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். 1976 ஆம் ஆண்டில், ஜோயல் கோஹன் என்பவர் கோடைகால சங்கிராந்தியின் தொடக்கத்தை கொண்டாட ஒரு இசை நிகழ்ச்சியை முன்மொழிந்தார், அதனால் தான் உலக இசை தினம் கொண்டாடப்பட ஆரம்பித்தது என்று இன்னொரு தரப்பினர் கூறுகிறார்கள். இந்த காரணத்தால் தான் பிரான்சிஸ் நாட்டின் கோடைகால தொடக்கத்தின் போது இந்த தினம் கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. எது எப்படியோ, உலக மொழியான இசையை கொண்டாட ஒரு தனி தினம் வேண்டுமா என்ன? அதை நாம் அனுதினமும் கொண்டாடிக் கொண்டே தானே இருக்கிறோம்.