ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை சீனாவின் ஹாங்சோவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023க்கான இந்திய டென்னிஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடி அணிவகுப்பின்போது அணியின் ஆடவர் பிரிவுக்கு ரோகன் போபண்ணாவும், மகளிர் பிரிவுக்கு அங்கிதா ரெய்னாவும் தலைமை தாங்க உள்ளனர்.
2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் சானியா மிர்சாவுடன் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சாகேத் மைனேனியும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
சானியா மிர்சா இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததால் அணியில் இடம் பெறவில்லை.
அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் என எட்டு பதக்கங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
india tennis squad
இந்திய டென்னிஸ் அணி வீரர்களின் பட்டியல்
2023 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஆடவர் அணி: ரோகன் போபண்ணா, சுமித் நாகல், யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி, முகுந்த் சசிகுமார், ராம்குமார் ராமநாதன்; விளையாடாத கேப்டன்: ரோஹித் ராஜ்பால்.
மகளிர் அணி: ருதுஜா போஸ்லே, அங்கிதா ரெய்னா, கர்மன் கவுர் தண்டி, பிரார்த்தனா தோம்பரே, வைதேஹி சவுதாரி, சஹாஜா யம்லபள்ளி; விளையாடாத கேப்டன்: அங்கிதா பாம்ப்ரி. கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய டென்னிஸ் அணி ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களுடன் திரும்பிய நிலையில், இந்த முறை கூடுதல் பதக்கங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.