
நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
செய்தி முன்னோட்டம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார், அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி(நாளை) இப்படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' என்னும் சிங்கிள் பாடல் வெளியிடப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே அதன் ப்ரோமோ நேற்று(ஜூன்.,20) வெளியாகி ட்ரெண்டானது.
இந்நிலையில் விஜய் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு 'லியோ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என்று இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அண்மையில் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பானது விஜய் ரசிகர்கள் மத்தியில் இரட்டிப்பு சந்தோஷத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு குறித்த தகவல்
#Clicks | நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகிறது ‘லியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!#SunNews | #LEO | @actorvijay | @Dir_Lokesh | @anirudhofficial pic.twitter.com/WPRavAQ7sb
— Sun News (@sunnewstamil) June 21, 2023