
அடுத்து இந்தியாவில் வெளியாகவிருக்கும் எஸ்யூவிக்கள் என்னென்ன?
செய்தி முன்னோட்டம்
ஆட்டோ உலகில் தற்போதைய வாடிக்கையாளர்களின் தேர்வு எஸ்யூவிக்கள் தான். இந்தியாவில் வெளியாகும் அல்லது அப்டேட் செய்யப்படும் எஸ்யூவிக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
இந்த ஆண்டு இனி வரும் மாதங்களில் வெளியாகிவிருக்கும் எஸ்யூவிக்கள் என்னென்ன? பார்க்கலாம்.
ஹோண்டா எலிவேட்:
தங்களுடைய புதிய எஸ்யூவியான 'எலிவேட்'டை இந்த மாதத் தொடக்கத்தில் தான் இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா. ரூ.11 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த எஸ்யூவி வரும் ஆகஸ்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்ரன் C3 ஏர்கிராஸ்:
C3 ஏர்கிராஸ் எஸ்யூவியை விரைவில் இந்தியாவில் வெளியிடவிருக்கிறது சிட்ரன். 1.2 லிட்டர் டர்போசார்ஜூடு பெட்ரோல் இன்ஜினுடன் ரூ.9 லட்சம் விலையில் இந்த எஸ்யூவி இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்யூவி
ஹூண்டாய் எக்ஸ்டர்:
ரூ.6-10 லட்சம் விலைக்குள் தங்களுடைய புதிய எக்ஸ்டர் எஸ்யூவியை வரும் ஜூலை 10-ம் தேதி இந்தியாவில் வெளியிடவிருக்கிறுத ஹூண்டாய். 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் CNG ஆகிய இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடனும் வெளியாகவிருக்கிறது எக்ஸ்டர்.
கியா செல்டோஸ் ஃபேஸ்லிப்ட்:
ரூ.10.89 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது செல்டோஸ். இந்த மாடலின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை அடுத்த மாதம் வெளியிடவிருக்கிறது கியா.
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிப்ட்:
இன்ஜின் மாற்றங்கள் ஏதுமின்றி, காஸ்மெடிக் மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்ட புதிய ஃபேஸ்லிப்டட் நெக்ஸானை வெளியிடவிருக்கிறது டாடா. அடிப்படை மாடலின் தொடங்க விலை ரூ.8 லட்சமாகவும், டாப்-எண்டு மாடலின் விலை ரூ.16 லட்சமாகவும் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.