மகாராஷ்டிரா பிரீமியர் லீக்கில் சதமடித்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய யு-19 வீரர் அர்ஷின் குல்கர்னி
இந்திய யு-19 கிரிக்கெட் வீரரான அர்ஷின் குல்கர்னி மகாராஷ்டிரா பிரீமியர் லீக்கில் ஈகிள் நாசிக் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். புனேரி பாப்பா அணிக்கு எதிரான போட்டியில் ஈகிள் நாசிக் டைட்டன்ஸ் அணிக்காக களமிறங்கிய அர்ஷின் குல்கர்னி 54 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்கள் விளாசி 117 ரன்களை குவித்தார். மேலும் ராகுல் திரிபாதியுடன் சேர்ந்து ஈகிள் நாசிக் டைட்டன்ஸ் அணியின் ஸ்கோரை 203 ரன்களுக்கு உயர்த்தினார். தொடர்ந்து பந்துவீச்சின்போது, நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மேலும் போட்டியின் கடைசி ஓவரில் 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அர்ஷின் குல்கர்னி 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.