
இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு அரசியல்வாதிகள் தடையாக இருக்க கூடாது என முன்னாள் கேப்டன் வலியுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
ஹைப்ரிட் மாடல் முறைக்கு ஒப்புதல் அளித்து ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்த சர்ச்சை தீர்க்கப்பட்டாலும், இது பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பலரும் இது குறித்து தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியாண்டட் இது குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது மற்றொரு முன்னாள் கேப்டன் இன்டிகாப் ஆலமும் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு விளையாட வந்திருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆசிய கோப்பைக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு சென்றிருந்தால் அது சிறந்த முடிவாக இருந்திருக்கும் என்றும், துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை என்றும் ஆலம் கூறினார்.
indicop alam requests politicians
கிரிக்கெட் மட்டுமே பகையை குறைக்கும் என வலியுறுத்திய இன்டிகாப் ஆலம்
இண்டிகாப் ஆலம் அளித்த பேட்டியில், "எங்கள் அரசியல்வாதிகளுக்கு எனது ஒரே வேண்டுகோள் என்னவென்றால், அவர்கள் வாள்களை உருவுவதற்குப் பதிலாக, இரு அணிகளையும் விளையாட அனுமதிக்க வேண்டும்.
கிரிக்கெட் வீரர்கள் சந்திக்கட்டும். அவர்கள் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளட்டும். அவர்கள் பயணம் செய்யட்டும்" என்று கூறினார்.
மேலும், "கிரிக்கெட் மட்டுமே பகையைக் குறைக்கும் மற்றும் இரு நாடுகளுக்கு இடையே அன்பையும் நட்பையும் பரப்பும். அதுதான் ஒரே வழி.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, எல்லையின் இருபுறமும் உள்ள சிலர் அதை செயல்பட விரும்பவில்லை." எனக் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட் போட்டி நடக்கும் அரங்குக்கு பெரும் கூட்டத்தை இழுப்பவர்கள் என்றும், இந்த நாடுகள் இல்லாமல் கிரிக்கெட் வாழ முடியாது என்றும் ஆலம் மேலும் கூறினார்.