Page Loader
சவூதி புரோ லீக்கில் இணைந்தார் பிரான்ஸ் கால்பந்து வீரர் என்'கோலோ காண்டே
சவூதி புரோ லீக்கில் இணைந்தார் பிரான்ஸ் கால்பந்து வீரர் என்'கோலோ காண்டே

சவூதி புரோ லீக்கில் இணைந்தார் பிரான்ஸ் கால்பந்து வீரர் என்'கோலோ காண்டே

எழுதியவர் Sekar Chinnappan
Jun 21, 2023
06:26 pm

செய்தி முன்னோட்டம்

பிரான்ஸின் உலகக் கோப்பை வென்ற மிட்ஃபீல்டர் என்'கோலோ காண்டே சவூதி புரோ லீக் சாம்பியன் அல் இத்திஹாட்டில் இணைந்துள்ளார் என்று கால்பந்து கிளப் புதன்கிழமை (ஜூன் 21) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரான்ஸை சேர்ந்த கரீம் பென்செமா ஏற்கனவே அல் இத்திஹாட்டில் இணைந்த நிலையில், தற்போது இரண்டாவது பிரான்ஸ் வீரராக என்'கோலோ காண்டேவும் இணைந்துள்ளார். காண்டே 2018 இல் பிபா உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் முக்கிய பங்கு வகித்ததோடு, கிளப் போட்டிகளில் செல்சியா அணிக்காக சாம்பியன்ஸ் லீக், பிரீமியர் லீக் மற்றும் உலக கிளப் கோப்பையை வென்றுள்ளார். மேலும் லீசெஸ்டர் சிட்டி அணிக்காகவும் பிரீமியர் லீக் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

அல் இத்திஹாட்டில் இணைந்தார் என்'கோலோ காண்டே