NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர், யார் இந்த பவானி தேவி?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர், யார் இந்த பவானி தேவி?
    ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார் பவானி தேவி

    ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர், யார் இந்த பவானி தேவி?

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 20, 2023
    11:14 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி திங்களன்று (ஜூன் 19), சீனாவின் வுக்ஸியில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான சேபர் அரையிறுதியில் தோல்வியடைந்து வெண்கலம் வென்றார்.

    இதன் மூலம் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்து வரலாறு படைத்தார்.

    பவானி தேவி அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானின் சைனாப் தயிபெகோவாவிடம் 14-15 என்ற புள்ளிக்கணக்கில் போராடி தோற்றார்.

    பவானியின் வெற்றிக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்திய வாள்வீச்சு சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா, "இந்திய வாள்வீச்சுக்கு இது மிகவும் பெருமையான நாள். இதுவரை யாராலும் சாதிக்க முடியாததை பவானி சாதித்துள்ளார். அவரை வாள்வீச்சு சங்கம் சார்பாக வாழ்த்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

    background of ca bhavani devi

    பவானி தேவியின் பின்னணி

    தமிழகத்தின் சென்னையை சேர்ந்த பவானி தேவி பள்ளியில் ஆறாம் வகுப்பில் படிக்கும்போது வாள்வீச்சு பயிற்சியில் சேர்ந்துள்ளார்.

    பத்தாம் வகுப்பை முடித்த பிறகு, கேரளாவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சியை தொடங்கிய பவானி தேவி, தனது 14வயதில் துருக்கியில் நடந்த சர்வதேச போட்டியில் கலந்துகொண்டார்.

    அதில் போட்டிக்கு மூன்று நிமிடம் தாமதமாக சென்றதால் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டாலும், அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பல பதக்கங்களை குவித்துள்ளார்.

    குறிப்பாக டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தேர்வாகி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து, ஒலிம்பிக்கில் வாள்வீச்சிற்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்ததோடு, தற்போது இந்திய வாள்வீச்சு விளையாட்டின் முகமாக மாறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வாள்வீச்சு
    இந்தியா
    இந்திய அணி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    வாள்வீச்சு

    ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா இந்தியா

    இந்தியா

    காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அவதார் சிங் காந்தா இங்கிலாந்தில் உயிரிழந்தார் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    மைனர் பெண்ணை பிரிஜ் பூஷன் துன்புறுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை: காவல்துறை  பாஜக
    100 பில்லியன் டாலர்கள் மதிப்பை அடையும் வாய்ப்பைக் கொண்டிருக்கும் போன்பே மற்றும் ஃப்ளிப்கார்ட் வணிகம்
    இந்தியாவில் ஒரே நாளில் 106 கொரோனா பாதிப்பு: ஒருவர் உயிரிழப்பு  கொரோனா

    இந்திய அணி

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2023 : இந்தியாவின் முகமது ஹுசாமுதீன் வெண்கலம் வென்றார்! உலக கோப்பை
     எஃப்ஐஎச் ஹாக்கி ப்ரோ லீக் : 24 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு! ஹாக்கி போட்டி
    இந்திய வீரர்கள் அதிர்ச்சித் தோல்வி! சுதிர்மான் கோப்பையில் இருந்து வெளியேறியது! பிவி சிந்து
    'ஒருநாள் உலகக்கோப்பையை புறக்கணிப்போம்' : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மிரட்டல்! ஒருநாள் உலகக்கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025