தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்': படப்பிடிப்பை நிறைவு செய்தார் சிவராஜ்குமார்
செய்தி முன்னோட்டம்
கோலிவுட்: 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வந்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வரலாற்று பாணியில் உருவாகி வரும் தனுஷின் இந்த புதிய திரைப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், ஜான் கொக்கன், நிவேதிதா சதிஷ் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கியமான ரோல்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் 3 பாகங்களாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வாமாக இது குறித்த எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை.
ஜஃட்ஸோ
ஜெயிலர் திரைப்படத்திலும் சிவராஜ்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
வரும் ஜூன் 28ஆம் தேதி நடிகர் தனுஷின் பிறந்த தினம் என்பதால், அன்று இந்த திரைப்படம் குறித்த முக்கியமான தகவல் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.
இதற்கிடையில், இந்த திரைப்படத்தில் நடித்த வந்த பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் படப்பிடிப்பு நேற்று முடிவடைந்திருக்கிறது.
மொத்த படத்தின் படப்பிடிப்பும் இந்த மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
'கேப்டன் மில்லர்' தவிர, நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் நெல்சனின் 'ஜெயிலர்' திரைப்படத்திலும் சிவராஜ்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.