ஆதிபுருஷ் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு கடிதம்
செய்தி முன்னோட்டம்
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் ராமாயணத்தினை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் 'ஆதிபுருஷ்'.
இதில் பிரபாஸ் ராமராகவும், கீர்த்தி சனோன் சீதை காதாபாத்திரத்திலும், ராவணன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகரான சையிப் அலிகான் அவர்களும் நடித்துள்ளார்கள்.
தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் கடந்த ஜூன் 16ம்தேதி வெளியானது.
இதன் வசூல் முதல்வார இறுதியில் ரூ.340கோடி என்று கூறப்பட்டது.
ஆனால் அதன்பின்னர் இப்படத்திற்கு நெகட்டிவ் கமெண்ட்கள் தான் அதிகம் வந்தது என்று கூறப்படுகிறது.
இதனிடையே இப்படத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்று அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து அவர்கள் பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றினையும் தற்போது எழுதியுள்ளார்கள்.
கடிதம்
இந்துக்களின் மத உணர்வுகள் புண்படும் வகையில் படம் அமைந்துள்ளது
அதன்படி, அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், ஆதிபுருஷ் திரைப்படம் இந்துக்களின் மத உணர்வுகள் புண்படும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
அதில் வரும் காட்சிகள் மற்றும் வசனங்கள் ராமர், அனுமன் மற்றும் சனாதன தர்மத்தினை அவமதிப்பது போல் உள்ளது.
ராமர், ராவணன், அனுமன் ஆகியோர் கதாபாத்திரங்கள் வீடியோ கேமில் வருவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றிலேயே மிக மோசமான இப்படத்தில் பிரபாஸ், சையிப் அலிகான் மற்றும் கீர்த்தி சனோன் ஆகியோர் நடித்திருக்கவே கூடாது என்று எழுதியுள்ளனர்.
மேலும் அவர்கள், பிரதமர் மோடி இப்படத்தினை திரையிடுவதை தடுத்து நிறுத்துவதோடு, வரும் காலங்களிலும் இப்படத்தினை திரையரங்குகள் அல்லது ஓடிடி தளங்களில் திரையிடவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.