Page Loader
ஐநா சபை நடத்திய யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் பிரதமர் மோடி
ஐநா சபை, சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க பிரதமர் மோடியை அழைத்திருக்கிறது

ஐநா சபை நடத்திய யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் பிரதமர் மோடி

எழுதியவர் Sindhuja SM
Jun 21, 2023
07:00 pm

செய்தி முன்னோட்டம்

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் 180க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தூதர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர், ஐ.நா.வின் உயர் அதிகாரிகள், இராஜதந்திரிகள் போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, இதே ஐநா சபை மேடையில் நின்று தான் யோகாவிற்கு என்று ஒரு தினத்தை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி முன்மொழிந்தார். இன்று அதே ஐநா சபை, சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க பிரதமர் மோடியை அழைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

ஐநா சபை வளாகத்தில் நடத்தபட்ட யோகா நிகழ்ச்சியின் வீடியோ