கலைஞர் கோட்டம் திறப்பு விழா - பீகார் முதல்வரின் தமிழக வருகை திடீர் ரத்து
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் ஆழித்தேர் வடிவில் கலைஞர் கோட்டம் காட்டூரில் உள்ள தயாளுஅம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டத்தில் பல்வேறு சிறப்புகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இதன் திறப்பு விழாவானது இன்று(ஜூன்.,20) மதியம் 3.30 மணிக்கு மேல் நடக்கவுள்ளது. அதன்படி, இந்த கோட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்களும் இணைந்து திறந்துவைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் தமிழக வருகையானது அவரது உடல்நிலை காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, துணை-முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் அமைச்சர் சஞ்சய் ஜா ஆகியோர் மட்டுமே இன்று வருகை தரவுள்ளார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.