மீண்டும் இந்தியாவில் தொடங்கப்படுகிறதா எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் பிரதமர் மோடி மேற்கொண்டிருக்கும் மூன்று நாட்கள் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று எலான் மஸ்க்கைச் சந்தித்திருக்கிறார்.
பல்வேறு தலைப்புகள் குறித்து கலந்துரையாடிய அவர்கள், இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை மீண்டும் வழங்குவது குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது.
பிரதமர் மோடியடனான சந்திப்புக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் ஸ்டார்லிங்க் இணைய சேவையை துவங்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் எலான் மஸ்க்.
2021-ல் ஏற்கனவே இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை கொண்டுவர எலான் மஸ்க் திட்டமிட்டு அறிமுகப்படுத்தினார். ஆனால், ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை.
மேலும், ஸ்டார்லிங்க் சேவைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என மத்திய அமைச்சகம் எச்சரித்தததால், இந்தியாவில் அதன் அத்தியாயம் முடிவுக்கு வந்தது.
எலான் மஸ்க்
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணையசேவை:
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கிட்டத்தட்ட அனைத்து கிராமங்களிலும் இணைய சேவை இருக்கிறது என்றாலும், இணைய சேவையின் வேகம் கிராமப்புரங்களில் குதிரைக் கொம்பாகவே இருக்கிறது.
நகரங்களில் கிடைக்கும் இணைய வேகம், கிராமப்புரங்களில் கிடைப்பத்தில்லை. இதற்கு இந்தியாவின் பல்வேறு வகையான நிலப்புரப்பும் ஒரு காரணமாகும்.
எனவே, செயற்கைகோள் வழியாக இணைய சேவையை வழங்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க், இந்தியாவிற்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.
ஆனால், அமெரிக்காவில் மாதம் 90 டாலர்கள் என்ற விலையில் இணைய சேவையை ஸ்டார்லிங்க் வழங்கி வருகிறது.
மலிவு விலையில் இணைய வசதி வழங்கப்படும் இந்தியாவில், விலையுயர்ந்து ஸ்டார்லிங்க் சேவை எந்தளவிற்கு பலனளிக்கும் என்பது கேள்விக்குறி தான். அதிவேக இணையம் என்றாலும், அது குறைவான விலையில் கொடுக்கப்பட்டால்தான் அது மாற்றத்தை ஏற்படுத்தும்.