ராணுவ வீரர் என்னும் பெயரில் க்யூஆர் கோடு மூலம் நூதன மோசடி - விழிப்புணர்வு வீடியோ
செய்தி முன்னோட்டம்
சைபர் கிரைம் குற்றங்களில் தற்போது ஒரு புதுவித மோசடி நடந்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு சமீபத்தில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், ராணுவ அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, புகைப்படம், அடையாளஅட்டை ஆகியவற்றினை, அறைகலனகம், எலக்ட்ரானிக் கடைகள் போன்றைவைகளை நடத்தும் வியாபாரிகளுக்கு பகிர்கிறார்களாம்.
அதனைத்தொடர்ந்து, அவர்களிடம் தாங்கள் மிலிட்டரி ஹெட்-குவாட்டர்ஸ்'லிருந்து பேசுவதாகவும், தங்களுக்கு பர்னிச்சர்ஸ், டெலிவிஷன், ஏ.சி.,போன்ற பொருட்கள் தேவைப்படுகிறது என்றும் கூறி, கிட்டத்தட்ட ரூ.1 லட்சத்திற்கும் மேலாக பொருட்களை ஆர்டர் செய்கிறார்களாம்.
அதற்கான பணத்தினை ஆன்லைன் பரிவர்த்தனை செய்வதாகக்கூறி, க்யூஆர்-கோடினை ஸ்கேன் செய்ய சொல்கிறார்களாம்.
அவ்வாறு செய்யப்படும் பொழுது, வியாபாரிகளின் வங்கிவிவரங்கள் அனைத்தும் அவர்களுக்கு தெரியவருகிறது.
பின்னர் வியாபாரிகளின் வங்கிக்கணக்கிலிருந்து பணமானது மோசடி செய்யப்படுகிறது என்று விவரிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
சைலேந்திர பாபுவின் விழிப்புணர்வு வீடியோ
#WATCH | வியாபாரிகளை குறிவைத்து நூதன முறையில் நடைபெறும், QR கோடு மோசடி குறித்து காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு விழிப்புணர்வு வீடியோ வெளியீடு!#SunNews | #QRCodeScam | #AwarenessVideo | @tnpoliceoffl pic.twitter.com/LzgqYzffxa
— Sun News (@sunnewstamil) June 26, 2023