
கோவை பெண் ஒட்டுநர் ஷர்மிளாவிற்கு காரினை பரிசாக அளித்த நடிகர் கமல்
செய்தி முன்னோட்டம்
கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்தவர் ஷர்மிளா(23).
இவருக்கு வாகனங்களை ஓட்டுவதில் அதீத ஆர்வமிருந்த காரணத்தினால் கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக கடந்த மார்ச் மாத இறுதியில் தனியார் பேருந்தில் ஓட்டுநர் பணியில் சேர்ந்தார்.
கோவையின் முதல் பெண் ஓட்டுநர் என்பதால் ஷர்மிளா தனது பணியில் ஈடுபட்டிருக்கும் நேரத்திலேயே, அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துவந்தனர்.
அதன்படி, கடந்த ஜூன்.,23ம்தேதி காலை திமுக பொது செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான கனிமொழி ஷர்மிளாவை காந்திபுரம் பேருந்துநிலையத்தில் சந்தித்து பாராட்டியுள்ளார்.
தொடர்ந்து அவரது பேருந்திலேயே ஏறி, பீளமேடு வரை, ஷர்மிளாவுடன் உரையாடியப்படி பயணம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது பயணச்சீட்டு எடுக்கச்சொல்லி அப்பேருந்தின் பெண் நடத்துநர், அன்னதாய் என்பவர் கேட்டதாக தெரிகிறது.
கார்
தன்னைப்போல் பல ஷர்மிளாவை உருவாக்குவார் - நடிகர் கமல் நம்பிக்கை
அப்போது ஷர்மிளாவுக்கும்-நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இதேச்சம்பவத்தால் பேருந்து உரிமையாளர் தன்னோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தன்னை பணியினைவிட்டு நீக்கியதாக ஷர்மிளா அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் ஷர்மிளாவுக்கு கார் ஒன்றினை பரிசாக அளித்துள்ளார்.
இதுகுறித்து கமல், "தனது வயதினையொத்த பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் இவரது நிலை குறித்து தெரியவந்தது. எனவே கமல் பண்பாட்டு மையம் சார்பில் ஓர் புதிய கார் ஷர்மிளாவிற்கு பரிசாக அளிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
ஷர்மிளா ஓட்டுநராக மட்டும் இருந்துவிட வேண்டியவர் அல்ல, தன்னைப்போல் பல ஷர்மிளாவை உருவாக்குவார் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த கார் மூலம் அவர் வாடகை கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தினை தொடருவார் என்றும் கமல் கூறியது குறிப்பிடத்தக்கது.