
தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தமிழக அணி தகுதி
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அணி தனது வரலாற்றில் இரண்டாவது முறையாக சீனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
திங்கட்கிழமை (ஜூன் 26) காலை நடந்த அரையிறுதியில் ரயில்வே அணியை எதிர்கொண்ட தமிழ்நாடு அணியின் இளம் வீராங்கனை ப்ரியதர்ஷினி போட்டி தொடங்கி 3வது நிமிடத்திலேயே கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரயில்வே அணி முதல் பாதி முழுவதும் தற்காப்பு ஆட்டத்தை விளையாடிய நிலையில், இடைவேளைக்கு பிறகு சுப்ரியா ரௌத்ரே, இந்துமதி கதிரேசன் தலா ஒரு கோல் அடிக்க தமிழகம் வலுவான நிலையை பெற்றது.
ரயில்வேக்காக திபர்னிதா டே ஒரு கோல் அடித்த நிலையில், தமிழகம் இறுதியில் 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
ட்விட்டர் அஞ்சல்
தமிழக கால்பந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
#SportsClick | தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தமிழ்நாடு தகுதி#SunNews | #WomensFootball | @SportsTN_ pic.twitter.com/4Dfx7bYOkb
— Sun News (@sunnewstamil) June 26, 2023