Page Loader
சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு சட்டைக்கு தடை - ஆளுநர் வருகை 
சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு சட்டைக்கு தடை - ஆளுநர் வருகை

சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு சட்டைக்கு தடை - ஆளுநர் வருகை 

எழுதியவர் Nivetha P
Jun 27, 2023
11:40 am

செய்தி முன்னோட்டம்

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் 21ம் பட்டமளிப்பு விழா நாளை(ஜூன்.,28)நடைப்பெறவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கலந்துக்கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கவுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள ஆளுநரை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இணையதளம் மூலம் திராவிட விடுதலை கழகம், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தற்போது சேலம் மாநகர காவல்துறை பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரவுள்ள அனைவரும் கருப்பு நிற ஆடைகளை அணியாமல் வருவதனை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

ஆர்ப்பாட்டம் 

பெரியார் கைத்தடியால் அடித்து விரட்டிய சனாதனத்தினை ஆளுநர் அணிந்து வரக்கூடாது

இதனையடுத்து மாநகர காவல்துறை அறிவுறுத்தல்படி, கருப்பு நிற ஆடைகளுக்கு தடை விதித்து பல்கலைக்கழக பதிவாளரான தங்கவேல் அவர்கள் சுற்றறிக்கையினை அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து இந்த விழாவிற்கு வருவோர் கைப்பேசிகளை எடுத்து வருவதனையும் தவிர்க்க வேண்டும் என்றும் பெரியார் பல்கலைக்கழக இணைவில் உள்ள கல்லூரிகள் மற்றும் அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்று தெரிகிறது. இந்நிலையில் இந்த கருப்பு சட்டைக்கு தடை விதித்துள்ள விவகாரத்திற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி, "ஆளுநர் வருகை காரணமாக பல்கலைக்கழக மாணவர்கள் கருப்பு நிற ஆடை அணியக்கூடாது என்று சேலம் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அப்பொழுது, பெரியார் கைத்தடியால் அடித்து விரட்டிய சனாதனத்தினை ஆளுநர் அணிந்து வரக்கூடாது என்றும் காவல்துறை அறிவுறுத்தவேண்டும்" என்று கூறியுள்ளார்.