'லியோ' படத்தின் 'நா ரெடி' பாடலால் விஜய்க்கு வந்த சிக்கல்
சமீபத்தில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துவரும் 'லியோ' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. 'நா ரெடி' என தொடங்கிய அந்த பாடல், விஜய்யின் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நிலையில், இந்த பாடலினால் தற்போது நடிகர் விஜய்க்கு சிக்கல் எழுந்துள்ளது. 'நா ரெடி தான்'பாடல் மூலமாக, போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை ஊக்குவிக்கும் வகையிலும், இளைஞர் சமூகத்தை கெடுப்பதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில், செல்வம் என்ற சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், தனது ரசிகர்கள் பலரை இதனால் தவறான பாதையில் கொண்டு செல்வதாகவும் நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார் செல்வம்.