1,20,000 அடி உயரத்தில் ஒருநாள் உலகக்கோப்பை டிராபியை அறிமுகம் செய்தது ஐசிசி
இந்தியாவில் அக்டோபர் - நவம்பர் மாதம் நடக்க உள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், இதற்கான கோப்பையை யாரும் எதிர்பாராத வகையில் பிரமாண்ட முறையில் திங்கட்கிழமை (ஜூன் 26) வெளியிட்டுள்ளது. ஐசிசி மற்றும் பிசிசிஐ 1,20,000 அடி உயரத்தில் உலகக்கோப்பையை அறிமுகம் செய்து, விண்வெளியில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் விளையாட்டு கோப்பை என்ற பெருமையை பெற்றுள்ளது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பூமியின் வளிமண்டலத்தில் டிராபி வெளியிடப்பட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளார். மேலும் இந்தியாவில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) முதல் தொடங்க உள்ள கோப்பையின் சுற்றுப்பயணத்தின் முழு அட்டவணையையும் ஐசிசி வெளியிட்டுள்ளது. அட்டவணையில் உள்ள வரிசைப்படி கோப்பை 18 நாடுகளில் காட்சிப்படுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் இந்தியா கொண்டுவரப்படும்.