
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே புதிய மேம்பாலம்: தமிழக அரசு அரசாணை
செய்தி முன்னோட்டம்
சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, புதிய மேம்பாலம் கட்டுவதற்காக, 195 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அரசாணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.
ஏற்கனவே இது குறித்து சட்ட பேரவையில் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்திருந்த நிலையில், இதற்கான அரசாணை இன்று வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பின் படி, இந்த மேம்பாலம், உத்தமர் காந்தி சாலையில் அமைந்துள்ள பாம்குரோவ் ஹோட்டல் அருகே தொடங்கி, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையை வந்தடையும்.
மேலும், ஏற்கனவே அமைக்கப்பட்ட கோயம்பேடு மேம்பாலம் மற்றும் வடபழனி மேம்பாலத்தை போன்றே, இந்த மேம்பாலமும், 14மீ அகலத்துடன், நான்கு வழிச்சாலை கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
வள்ளுவர் கோட்டம் மேம்பாலம்
#JUSTIN || சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் வாகன நெரிசலை குறைக்க புதிய மேம்பாலம்
— Thanthi TV (@ThanthiTV) June 27, 2023
*₨195 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு#TNGovt #ThanthiTV pic.twitter.com/s31eUSk3tU