
முத்தலாக் நடைமுறைக்கு முடிவுகட்ட வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு
செய்தி முன்னோட்டம்
முத்தலாக் நடைமுறைக்கு முடிவுகட்ட வேண்டும் என்றும், பொதுவான சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி இன்று(ஜூன் 27) வலியுறுத்தினார்.
இன்று மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில், தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பாஜகவின் 'எனது பூத் எல்லாவற்றையும் விட பலமான பூத்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் சிறப்பான பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, "உலகின் மிகப் பெரியக் கட்சியாக பாஜக மாறியதற்கு மத்தியப் பிரதேசத்தின் பங்கு அதிகம் இருக்கிறது. அரசியலில் வாக்கு வங்கி பாதையில் செல்வதில்லை என பாஜக முடிவு செய்துள்ளது. கிராமங்களின் வளர்ச்சியே நமக்கு முக்கியம்" என்று கூறினார்.
சஜின்
மேலும், முத்தலாக் குறித்து இன்று பிரதமர் மோடி பேசியதாவது:
"இஸ்லாத்தில் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாக இருந்தால், எகிப்து, இந்தோனேசியா, கத்தார், ஜோர்டன், சிரியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் அது ஏன் நடைமுறையில் இல்லை.
ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவது பாஜகவின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாகும்.
ஒரே குடுமபத்தில் உள்ளவர்களுக்கு வெவ்வேறு சட்டம் இருந்தால் அது வேலைக்கு ஆகாது. அதே போல் ஒரு நாடு இரண்டு சட்டங்களின் கீழ் இயங்க முடியாது.
எகிப்தில் இருக்கும் 90 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள். இருப்பினும், அந்த நாட்டில் 80-90 ஆண்டுகளுக்கு முன்பே முத்தலாக் நடைமுறை ரத்து செய்யப்பட்டுவிட்டது.
முத்தலாக் வாதத்தை முன்வைப்பவர்கள், வாக்கு வங்கிக்காக முஸ்லிம் பெண் குழந்தைகளுக்கு கடும் அநீதி இழைக்கிறார்கள்."