ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்து புதிய அப்டேட்டை வெளியிட்ட கேன் வில்லியம்சன்
செய்தி முன்னோட்டம்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக, குணமடைந்து வருவது குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, ஐபிஎல் 2023 தொடக்க ஆட்டத்தில், சென்னை சூப்பர் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் போது கேன் வில்லியம்சன் காயமடைந்தார்.
அதன் பின்னர் எந்த போட்டியிலும் பங்கேற்காத அவர் நாடு திரும்பதோடு, ஒருநாள் உலகக்கோப்பையில் இருந்தும் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், கேன் வில்லியம்சன் இன்னும் ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடும் நம்பிக்கையுடன் உள்ளார்.
kane williamson believes to comeback
இறுதி உலகக்கோப்பையில் கேன் வில்லியம்சன்
தனது உடற்தகுதி முன்னேற்றம் குறித்து வாரந்தோறும் கவனித்து வரும் கேன் வில்லியம்சன், "இதற்கு முன்பு எனக்கு இவ்வளவு நீண்ட கால காயம் இல்லை.
ஆனால் மற்றவர்களுடன் பேசும்போது இந்த பயணம் சற்று நீளமானது என்று தோன்றுகிறது. ஆனாலும் முயற்சி செய்கிறேன்." என்று கூறியுள்ளார்.
கேன் வில்லியம்சன் 2015 உலகக் கோப்பையில் வீரராக பங்கேற்ற நிலையில், 2019 உலகக் கோப்பையில் கேப்டனாகவும் நியூசிலாந்து அணியை இறுதிப்போட்டி வரை கொண்டு சென்றார்.
2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது கடைசி ஐசிசி தொடராக இருக்கும் என்று அவர் நம்புவதால், இதில் பங்கேற்றே தீர வேண்டும் என அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்.