LOADING...
மகளிர் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அபார வெற்றி
மகளிர் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அபார வெற்றி

மகளிர் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அபார வெற்றி

எழுதியவர் Sekar Chinnappan
Jun 26, 2023
06:20 pm

செய்தி முன்னோட்டம்

ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட மகளிர் ஆஷஸ் 2023 தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜில் நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக மகளிர் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா டெஸ்ட் வெற்றியைப் பெற்றது. மகளிர் ஆஷஸ் தொடரில் ஒரு டெஸ்ட் போட்டி, தலா மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், ஆஸ்திரேலிய மகளிர் அணி டெஸ்ட் வெற்றியுடன் 4 புள்ளிகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கு நான்கு புள்ளிகள் மற்றும் டி20, ஒருநாள் போட்டிகளுக்கு 2 புள்ளிகள் வழங்கப்பட்டு, இறுதியில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவர்.

eng w vs aus w test scorecard

ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து மகளிர் டெஸ்ட் ஹைலைட்ஸ்

போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்சில் 473 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 2457 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அன்னாபெல் சதர்லேண்ட் 137 ரன்கள் குவித்ததன் மூலம், மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்டாவது அல்லது அதற்குக் கீழே பேட்டிங் செய்து அதிக ஸ்கோரைப் பதிவுசெய்த வீராங்கனை என்ற சாதனை படைத்தார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் முதல் இன்னிங்சில் 463 ரன்கள் குவித்தாலும், இரண்டாவது இன்னிங்சில் 178 ரன்களுக்கு சுருண்டு தோல்வியைத் தழுவியது. அந்த அணியின் பியூமண்ட் மகளிர் ஆஷஸ் தொடரில் இரட்டை சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்டனர் 12 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.