Page Loader
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசாக மழை பெய்ய வாய்ப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பதிவாகி இருக்கிறது

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசாக மழை பெய்ய வாய்ப்பு

எழுதியவர் Sindhuja SM
Jun 26, 2023
06:53 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 26 மற்றும் ஜூன் 27 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ஜூன் 28 முதல் ஜூன் 30 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48-மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.

ட்விட்டர் அஞ்சல்

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை பதிவான இடங்கள்