ஒருநாள் உலகக்கோப்பை 2023 : பகலிரவு ஆட்டமாக நடக்கும் இந்திய அணியின் போட்டிகள்
12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) வெளியிட்டது. இதில் இந்திய கிரிக்கெட் அணி ஐந்து முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் லீக் போட்டியில் அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. அதேசமயத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. போட்டிகள் பகல் மற்றும் பகலிரவு போட்டிகளாக திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளும் பகலிரவு போட்டிகளாகவே நடக்க உள்ளன. பகல் நேர போட்டிகள் காலை 10.30 மணிக்கும், பகலிரவு போட்டிகள் மதியம் 2 மணிக்கும் தொடங்கும்.
இந்தியாவின் லீக் போட்டி அட்டவணை
அக்டோபர் 8 - இந்தியா vs ஆஸ்திரேலியா, சென்னை அக்டோபர் 11 - இந்தியா vs ஆப்கானிஸ்தான், டெல்லி அக்டோபர் 15 - இந்தியா vs பாகிஸ்தான், அகமதாபாத் அக்டோபர் 19 - இந்தியா vs வங்கதேசம், புனே அக்டோபர் 22- இந்தியா vs நியூசிலாந்து, தர்மசாலா அக்டோபர் 29 - இந்தியா vs இங்கிலாந்து, லக்னோ நவம்பர் 2- இந்தியா vs குவாலிஃபையர் 2, மும்பை நவம்பர் 5 - இந்தியா vs தென்னாப்பிரிக்கா, கொல்கத்தா நவம்பர் 11 - இந்தியா vs குவாலிஃபையர் 1, பெங்களூர்