
உள்நாட்டு கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணியிலிருந்து குஜராத்துக்கு மாறிய ரவி பிஷ்னோய்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் வரவிருக்கும் உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக, லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் தனது அணியை மாற்றியுள்ளார்.
முதல்தர கிரிக்கெட் போட்டியில் தனது சொந்த அணியான ராஜஸ்தானுக்காக விளையாடி வந்த பிஷ்னோய், இப்போது குஜராத் அணியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய லெக்ஜி புதிய அணியில் மூத்த சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லாவுடன் இணைவார். பிஷ்னோய் இந்த அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டு, குஜராத் ஜெர்சியுடன் "புதிய ஆரம்பம்" என்று பதிவிட்டுள்ளார்.
ராஜஸ்தான் அணியில் தனக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
2022இல் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ரவி பிஷ்னோய் தனக்கான வாய்ப்பை பெற இந்த தொடரில் சிறப்பாக செயல்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
குஜராத் அணியில் இணைந்த ரவி பிஷ்னோய்
Ravi Bishnoi is set to play for Gujarat in the upcoming domestic season due to the limited opportunities in Rajasthan. [Sportstar] pic.twitter.com/gGuc0JSPiw
— Johns. (@CricCrazyJohns) June 26, 2023