ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி முதல் நாள் போட்டிகளில் அபார வெற்றி
ஆசிய சாம்பியன்ஷிப் கபடி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) இந்திய கபடி அணி 76-13 என்ற புள்ளிக் கணக்கில் போட்டியை நடத்தும் தென் கொரியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மேலும், இதன் பின்னர் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி 53-19 என புள்ளிக் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தியது. இந்தியா அடுத்த ஜூன் 28 அன்று ஜப்பானையும், ஜூன் 29 அன்று ஈரானையும், ஜூன் 30இல் ஹாங்காங்கையும் எதிர்கொள்கிறது. மேலும் ஜூன் 30 அன்றே இறுதிப்போட்டியும் நடைபெற உள்ளது. முன்னதாக கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த கடைசி ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.