Page Loader
இன்று பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது 
பொறியியல் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு..!

இன்று பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது 

எழுதியவர் Venkatalakshmi V
Jun 26, 2023
09:44 am

செய்தி முன்னோட்டம்

2023 -24 கல்வியாண்டுக்கான பொறியியல் இளநிலை பட்டப்படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதில் கிட்டத்தட்ட 1.54 லட்சம் இளநிலை பட்டபடிப்பிற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன்4-ம் தேதி வரை பெறப்பட்டது. இந்த விண்ணப்பங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்ற வாரம் நிறைவடைந்த நிலையில், இன்று (ஜூன் 26) பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த தரவரிசை பட்டியலை, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் வெளியிடுவார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மாணவர்கள், தரவரிசைப் பட்டியலை www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ட்விட்டர் அஞ்சல்

பொறியியல் தரவரிசை பட்டியல்