Page Loader
நடுவானில் விமானத்தின் தரையில் மலம் கழித்த பயணி கைது
அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடுவானில் விமானத்தின் தரையில் மலம் கழித்த பயணி கைது

எழுதியவர் Sindhuja SM
Jun 27, 2023
01:35 pm

செய்தி முன்னோட்டம்

நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் தரையில் மலம் கழித்ததற்காக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூன் 24ஆம் தேதி, மும்பையில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா(ஏஐசி 866) விமானத்தில் பயணித்த ராம் சிங்(இருக்கை எண் 17F) என்ற பயணி விமானத்தின் 9வது வரிசையில் மலம் மற்றும் சிறுநீர் கழித்திருக்கிறார். இந்த "தவறான நடத்தையை" அவதானித்த விமான பணியாளர்கள் அந்த பயணிக்கு வாய்மொழியாக எச்சரிக்கை விடுத்தனர். உடனடியாக அவர் மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டார். பிற பயணிகளை முகம் சுளிக்க வைத்த இந்த சம்பவம் குறித்து விமானத்தை ஓட்டி கொண்டிருந்த விமானிக்கும், ஏர் இந்தியா நிறுவனத்திற்கும் உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது.

பிஜேபிஜே

ஏர் இந்தியா விமானத்தில் இது போன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல

விமானம் டெல்லியில் வந்து தரையிறந்துகியதும், ஏர் இந்தியா பாதுகாப்புத் தலைவர் குற்றம்சாட்டப்பட்ட பயணியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 294 (ஆபாசமான செயல்கள்) மற்றும் 510 (குடிபோதையில் ஒருவரால் பொது இடங்களில் தவறான நடத்தை) ஆகியவற்றின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் இது போன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. சில மாதங்களுக்கு முன், மும்பையை சேர்ந்த ஷங்கர் மிஸ்ரா என்பவர் சகபயணியான ஒரு பெண்ணின் மீது சிறுநீர் கழித்ததற்காக கைது செய்யப்பட்டார். மேலும், இந்த சம்பவத்தால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.