25 Mar 2023

பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் - சிலிண்டர் மானியம் ரூ.200 அதிகரிப்பு

இந்தியாவில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் ஏற்றம் கண்டும் வரும் நிலையில், கடந்த மாதம் மட்டும் 50 ரூபாய் அதிகரித்து, ரூ.1118.50 என வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விற்பனை ஆகி வருகிறது.

கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்?

Asus நிறுவனம் கேம் பிரியர்களுக்காகவே ROG ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதுவரை ROG 6 வரை அறிமுகம் செய்துள்ளது.

ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜாக்கெட்டை அணிந்திருந்த வட கொரிய அதிபரின் மகள்

வட கொரியாவில் பஞ்சம் நிலவி வரும் நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகள் ரூ.2 லட்சம்(£1,950) மதிப்பிலான கிறிஸ்டியன் டியோர் வெல்வெட் ஹூடியை அணிந்திருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர்

காஷ்மீர், இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரயில் சேவை மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்படும்.

வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ

'அசுரன்' படத்திற்கு பிறகு நடிகர் சூரியை வைத்து வெற்றிமாறன் 'விடுதலை' என்னும் படத்தினை இயக்கி வருகிறார்.

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் நிது கங்காஸ்

புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ் தங்கம் வென்றார்.

நடிகர் சிம்புவின் 'பத்து தல' படத்தின் 'ராவடி' வீடியோ பாடல் வெளியீடு

கோலிவுட்டில் நடிகர் சிம்பு நடித்து வரும் 'பத்து தல' படத்தினை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஒபேலி என்.கிருஷ்ணா இயக்கி வருகிறார்.

ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோக்கு பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்ப்பு

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜானி பேர்ஸ்டோ நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும்(UT) ஒரு நிலையான பரிசோதனை அளவை பின்பற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று(மார் 25) தெரிவித்துள்ளது.

உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது

உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் டெல்லி கேட் என்னும் பகுதியில் வசித்து வருபவர் ஷாஹித்.

பஜாஜ் பல்சர் 220F Vs TVS அப்பாச்சி RTR 200 4V - சிறந்த பைக் எது?

பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் 220 எஃப் பைக்கை மீண்டும் இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

பொன்னியின் செல்வன்-2 ட்ரைலர் குறித்த அறிவிப்பு

பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்தி 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியது.

இலங்கைக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து வீரர் ஹென்றி ஷிப்லி அசத்தல்

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஹென்றி ஷிப்லி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! யாரும் இதை செய்யாதீங்க...

உலகெங்கிலும் மக்கள் டிஜிட்டல் பணபரிவர்தனைகளை தேர்வு செய்யும் வேளையில், அதை சார்ந்த மோசடிகளும் அதிகரித்து வருகிறது.

ஐபிஎல் 2023 : மேக்ஸ்வெல் உடற்தகுதி கேள்விக்குறி! ஆர்சிபிக்கு மிகப்பெரும் பின்னடைவு

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 போட்டிகள் தொடங்க இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி, தங்களின் முக்கியமான ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லின் உடற்தகுதி குறித்த கவலையில் உள்ளது.

தமிழகத்தில் இரண்டாவது தொழிற்சாலையை திறக்கும் ஆப்பிள் நிறுவனம்!

முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், தமிழ்நாட்டில் இரண்டாவதாக ஐபோன் தொழிற்சாலையை தொடங்க உள்ளது.

தொடர்ந்து ஏற்றத்துக்குபின் சரிந்த தங்கம் விலை! இன்றைய விபரம்

தங்கம் விலையானது அடிக்கடி ஏற்ற இறக்கமாக உள்ளது. ஒரு சில நாட்களில் வான்முட்டும் விலைக்கு செல்லும் தங்க விலை, சில நாட்களில் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்துவது போல குறைவது வழக்கம்.

பாம்பே ஜெய ஸ்ரீ உடல்நலம் சீராக உள்ளது - ட்விட்டரில் தகவல்

கர்நாடக இசை கலைஞரும், பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ கடந்த சில தினங்களுக்கு முன்னர் இசை நிகழ்ச்சி மற்றும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் நகருக்கு சென்றுள்ளார்.

மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பிரிசில்லாவுக்கு 3வது குழந்தை பிறப்பு!

மெட்டா நிறுவனத்தின் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது.

கர்நாடகாவில் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தினை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று(மார்ச்.,25) கர்நாடகா மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார்.

ஐபிஎல் 2023 : ஐடென் மார்க்ரம் தலைமையில் அதிரடி காட்டுமா சன்ரைசர்ஸ் ஹைதராபாத்?

புதிய கேப்டன் தலைமையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் 2023 இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இரண்டாவது பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை

தமிழகத்தில் தொடர்ந்து இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர் தங்கள் பணத்தினை இழந்து பாதிக்கப்படுவதோடு, இதனால் தற்கொலை எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்

மார்ச் 25ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் டேவிட் வார்னர் தலைமையில் முதல் பட்டத்தை வெல்லுமா டெல்லி கேப்பிடல்ஸ்?

மார்ச் 31ம் ஆ தேதி தொடங்க உள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) தனது முதல் ஐபிஎல் பட்டத்திற்கான தேடலை புதிய கேப்டன் டேவிட் வார்னர் தலைமையில் மீண்டும் தொடங்க உள்ளது.

குறைவான விலையில் அதிக மைலேஜ் தரும் சிறந்த 5 பைக்குகள்!

இந்திய வாகன சந்தையில் பல வாகனங்கள் வெளிவந்தாலும் மக்கள் அதிகம் விரும்புவது மைலேஜ் தரும் வாகனமும், விலை குறைவான வாகனமும் தான்.

மார்ச் 31 கடைசி நாள் - SMS மூலம் பான் மற்றும் ஆதாரை இணைப்பது எப்படி?

மார்ச் 31-ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்து இருந்தது.

ஐபிஎல் 2023 : இரண்டாவது பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்

கடந்த சீசனின் இரண்டாம் இடத்தைப் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இரண்டாவது பட்டத்தை பெறும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

பிரதமரின் கண்களில் பயம் தெரிகிறது: செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி

குஜராத் நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 வருட சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கப்பட்டார்,

ஹோண்டா மற்றும் டிவிஸ் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்!

தற்போதைய இந்திய வாகனசந்தையில் புதிய ட்ரெண்ட் எலக்ட்ரிக் வாகனங்கள்.

இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எம்பி பதவியில் இருந்து நேற்று(மார் 24) தகுதி நீக்கப்பட்டார்.

சென்னை கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் தொல்லை விவகாரம் - விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு

சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் ருக்மணி தேவி கவின் கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

பிரான்ஸ் அணிக்காக ஐந்தாவது அதிக கோல் அடித்த வீரர் : கைலியன் எம்பாபே புதிய சாதனை

யூரோ 2024க்கான தகுதிச் சுற்றின் குழு பி பிரிவில் பிரான்ஸ் கால்பந்து அணி நெதர்லாந்தை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: ஒரே நாளில் 1590 பாதிப்புகள்

146 நாட்கள் இல்லாத அளவு இந்தியாவில் தினசரி கொரோனாவின் எண்ணிக்கை 1,590ஆக அதிகரித்துள்ளது.

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் : இந்திய இரட்டையர் சாத்விக்-சிராஜ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

சுவிஸ் ஓபன் சூப்பர் சீரிஸ் 300 பேட்மிண்டன் போட்டியில் இந்திய இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி,டேனிஷ் ஜோடியான ஜெப்பே பே மற்றும் லாஸ்ஸே மோல்ஹெட் ஜோடியை போராடி தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது.

ராகுல் காந்தி தகுதி நீக்கத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு

கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி

இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆதரவாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே நடைபெற்ற அமைதி பேரணியில் ஏராளமான இந்திய- அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர்.

கோவை பெரியநாயக்கம்பாளையம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி

கோவை மாவட்டம் பெரியநாயக்கம்பாளையம் வனசரகத்திற்குள் பூச்சியூரில் நேற்று(மார்ச்.,24) நள்ளிரவு காட்டு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து அருகில் உள்ள பட்டா நிலங்களுக்குள் செல்ல முயற்சி செய்துள்ளது.

எர்த் ஹவர் என்றால் என்ன? மற்றும் அதன் முக்கியத்துவத்தை பற்றியும் அறிந்துகொள்ளுங்கள்

'Earth Hour' என்பது ஒவ்வொரு ஆண்டும், உலகளவில் நடைபெறும் ஒரு இயக்கமாகும். இந்த இயக்கம், உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைத்து, பூமியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும், காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவும் வலியுறுத்துகிறது.

மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய அரசு

இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் முதல் வெற்றி : வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்

ஷார்ஜாவில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

மார்ச் 25க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃப்ரீ பையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் 'காந்திய தத்துவத்திற்கு இழைத்த துரோகம்': அமெரிக்க எம்பி

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது, காந்திய தத்துவத்திற்கு "இழைத்த துரோகம்" என்று இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க எம்பி ரோ கண்ணா தெரிவித்திருக்கிறார்.

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : மேரி கோமின் சாதனையை சமன் செய்வாரா நிகத் ஜரீன்?

புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் மகளிர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிகளில் இந்தியாவின் நான்கு வீராங்கனைகள் சனிக்கிழமை (மார்ச் 25) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (மார்ச் 26) மோத உள்ளனர்.

பருக்களின் வீக்கத்தால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்காக சில வீட்டு குறிப்புகள்

ஒரு விசேஷ நாளன்று, உங்கள் முகத்தில் திடீரென ஒரு பரு தோன்றுவதை விட சோகமான விஷயம் எதுவும் இருக்காது. பளிச்சென்ற முகத்தில், சிவப்பான பவளம் போல மின்னும் பருக்களை, பார்க்கும் போது கோவமாக வரும். ஆனால், அவற்றை நம்மால் எதுவும் செய்யமுடியாது. காரணம், அதில் கை வைத்தால், முகத்தில் தீராத வடுவை ஏற்படுத்தும் கொடூர குணம் கொண்டது.

தந்தையை இயக்கப்போகும் தனயன்; பாரதிராஜாவை இயக்கப்போகும் மகன் மனோஜ்

இயக்குனர் பாரதிராஜாவின் மகனான, நடிகர் மனோஜ் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால், சினிமா தயாரிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 'மனோஜ் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தை நடத்தி வந்தார்.

24 Mar 2023

ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்?

2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ளதால் 10 அணிகளும் தயாராகி வருகின்றன.

ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனுக்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) பல சிக்கல்களுடன் தவித்து வருகிறது.

ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஏமாற்றமளிக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 சீசனுக்குப் பிறகு, நான்கு முறை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஐபிஎல் 2023இல் மீண்டெழும் நம்பிக்கையுடன் களமிறங்க உள்ளது.

உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில!

உலகெங்கிலும் உள்ள பாலங்கள், மக்களையும் இடங்களையும் இணைக்கும் வழிமுறையாக மட்டுமல்லாமல், பிராந்தியத்தின் அழகியலையும் கூட்டுகிறது.

கோவை ஆசிட் வீச்சு சம்பவம் - நீதிமன்ற நுழைவு வாயில்களில் தீவிர சோதனை

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் நேற்று(மார்ச்.,23) கணவன் மனைவி இடையேயான பிரச்சனையின் காரணமாக மனைவி மீது கணவர் ஆசிட் ஊத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஐபிஎல் 2023 : நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆதிக்கம் தொடருமா?

குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) நடப்பு சாம்பியனாக இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இல் பங்கேற்கிறது.

உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இரண்டாவது பதக்கத்தை வென்ற ருத்ராங்க்ஷ் பாட்டீல்

நடப்பு உலக சாம்பியனான ருத்ராங்க்ஷ் பாட்டீல் ஆடவர் 10மீ ஏர் ரைபிளில் வெண்கலம் வென்றார். இது தற்போது நடந்து வரும் போட்டியின் இரண்டாவது பதக்கமாகும்.

தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பொருட்காட்சி-சென்னை மெட்ரோ ரயில் அரங்கு 3ம் இடம் பிடித்துள்ளது

சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் 47வது அகில இந்திய சுற்றுலா பொருட்காட்சி சமீபத்தில் நடந்தது.

ஐபிஎல் 2023 : காயத்தில் அவதிப்படும் வீரர்களால் சிஎஸ்கே, எல்எஸ்ஜி அணிகளுக்கு பின்னடைவு!

இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர்களான முகேஷ் சவுத்ரி மற்றும் மோஷின் கான் ஆகியோர் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இல் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.

எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கூறிய பதில்

ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், "நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்" என்று ராகுல் காந்தி ட்விட்டரில் கூறியுள்ளார்.

சென்னையில் ஜி20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு

2023ம் ஆண்டின் ஜி20அமைப்புக்கு இந்தியா இம்முறை தலைமை பொறுப்பினை ஏற்றுள்ளது.

கெரட்டின் ஹேர் சிகிச்சை எடுக்கப் போகிறீர்களா - இதைத் தெரிந்து கொள்ளுங்கள்

சமீப காலமாக கூந்தல் பராமரிப்பு மற்றும் சிகிச்சைகளில் கெரட்டின் ஹேர் டிரீட்மென்ட் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது. கூந்தலை மிக எளிதாக பராமரிக்க உதவுகிறது என்பதால் இளம் பெண்கள் மட்டுமல்லாமல், நடுத்தர வயதுப் பெண்களுமே இந்த சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். ஒரே ஒரு கெரட்டின் தெரப்பி செய்து கொண்டாலே, விளம்பரங்களில் வருவது போலவே கூந்தல் பளபளப்பாக, பட்டு போல மாறுகிறது. ஆனால் இந்த சிகிச்சை எடுப்பதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு சில விஷயங்கள் உள்ளன. உண்மையாகவே ரசாயனங்கள் இல்லையா, முடியின் தன்மை பட்டு போல மாறுகிறா, தொடர்ச்சியாக பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. கெரட்டின் தெரப்பி ஒரு அழகு சிகிச்சையாக மட்டுமே பார்க்க முடியும்.

குழந்தைகளின் மன அழுத்தத்தை எப்படி குறைப்பது - 5 டிப்ஸ்

இப்போதெல்லாம், இளம் வயதிலேயே பள்ளி படிப்பு காலத்திலேயே குழந்தைகள் மன அழுத்தம், படபடப்பு, பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பெற்றோர்கள் ஒரு சில நிகழ்ச்சிகளை செய்வதன் மூலம் குழந்தைக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எளிதாக குறைக்க முடியும்.

ஹிண்டன்பர்க்கின் அடுத்த அறிக்கை - ஒரே நாளில் சரிந்த block inc நிறுவனம்!

அதானி நிறுவனத்தை ஒரே அடியாக சரித்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மீண்டும் ஒரு பெரிய நிறுவனம் குறித்து வெளியிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 ஆம் எண் கொண்ட ஜெர்சியை பயன்படுத்துவது ஏன்? எம்.எஸ்.தோனி கூறும் காரணம் இது தான்!

இந்தியன் பிரீமியர் லீக் 2023க்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், தோனி தனது ஜெர்சி எண்ணாக 7'ஐ வைத்துள்ளதற்கான காரணம் குறித்து கூறிய தகவல் மீண்டும் வைரலாகி வருகிறது.

சுனாமியை உருவாக்கக்கூடிய ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்: வடகொரியா சோதனை

"கதிரியக்க சுனாமியை" உருவாக்கக்கூடிய அணு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பலை வட கொரியா சோதித்துள்ளது.

லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு

மார்ச் 19, 2023 அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக டெல்லி காவல்துறை இன்று(மார் 24) வழக்கு பதிவு செய்தது.

கடும் பனி மற்றும் குளிரில் ரோந்து சென்ற BSF வீரர்: இணையவாசிகள் பாராட்டு

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர்(BSF) எல்லையில் பணிபுரியும் போது கடுமையான குளிரையும் காற்றையும் சமாளிக்க வேண்டி இருக்கிறது.

ஐபிஎல் 2023 : முதல் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 16வது சீசன் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ளது.

உலகளவில் செயல்படும் புளூ டிக் சேவை - பழைய வெரிஃபைடு முறை நிறுத்தம்!

சமூக வலைத்தளமான ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல்வேறு அம்சங்களை கொண்டு வந்துள்ளார்.

சென்னையில் புதைவட மின்கம்பிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் பொழுது மயிலாடுதுறை எம்,எல்.ஏ. ராஜகுமார், மயிலாடுதுறை பகுதியில் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களின் பொழுது மின் பாதிப்புகள் அதிகளவில் இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் - புனித குர்ஆனை 4 மாதங்களில் தனது கையால் எழுதி முடித்த கல்லூரி மாணவி

ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தில் கந்தர்பால் என்னும் மாவட்டத்தினை சேர்ந்த சலீமா என்னும் கல்லூரி மாணவி தனது கையால் 4 மாதங்களில் புனித திரு குர்ஆனை கம்ப்யூட்டரில் எழுதுவதுபோல் அழகான கையெழுத்தில் எழுதியுள்ளார்.

ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம்: அடுத்து என்ன நடக்கும்

குஜராத் நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 வருட சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கப்பட்டார் என்று மக்களவை செயலகம் இன்று(மார் 24) அறிவித்துள்ளது.

லண்டன் ஹோட்டலில் மயங்கி கிடந்த பிரபல பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ; மூளையில் ரத்த கசிவு எனத்தகவல்

பிரபல பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ, லண்டன் நகரம் அருகே இருக்கும் லிவர்பூலில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று சுயநினைவின்றி காணப்பட்டார் என செய்திகள் வெளியாகி உள்ளன.

வாட்ஸ்அப் டெஸ்க்டாப் வீடியோ கால் வசதி! புதிய அம்சங்கள் என்ன?

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்திக்கொண்டே சென்றாலும், பலரும் இன்டர்நெட் உபயோகப்படுத்தி தான் கால், வீடியோ, சாட் போன்றவற்றை செய்துவருகின்றனர். அதில் முக்கிய பங்கு வகிப்பது வாட்ஸ்அப் தான்.

800 கோல்களை அடித்த உலகின் இரண்டாவது கால்பந்து வீரர் : லியோனல் மெஸ்ஸி சாதனை

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பிறகு 800 தொழில்முறை கோல்களை அடித்த இரண்டாவது கால்பந்து வீரர் என்ற சாதனையை லியோனல் மெஸ்ஸி படைத்துள்ளார்.

ஐஸ்வர்யா வீட்டின் கொள்ளை விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்: காணாமல் போனதோ 60 சவரன்; மீட்கப்பட்டதோ 100 சவரன்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை போன விவகாரம், சென்னையையே உலுக்கியது எனலாம்.

மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்

கனடாவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள், இந்தியாவுக்கு எதிரான கிராஃபிட்டிகளை எழுதி அதை நாசம் செய்துள்ளனர்.

பாகிஸ்தானில் ஆசிய கோப்பை : இந்தியா பங்கேற்பது உறுதி! ஆனால் ஒரு ட்விஸ்ட்!

ஆசிய கோப்பை 2023 தொடர்பான இந்தியா-பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிசில் ரேட்டிங் வெளியிட்ட சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள்

மியூச்சுவல் பண்ட் ஆனது பலருக்கும் லாபம் தரும் முதலீட்டு விருப்பமாக இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் காரின் புதிய GLA, GLB ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அறிமுகம்!

ஜெர்மனியின் முன்னணி சொகுசு வாகன தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், அதன் GLA மற்றும் GLB எஸ்யுவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதவியில் இருந்து தகுதி நீக்கம்

கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அந்த வழக்கில் தனது வீட்டில் வேலை செய்பவர்கள் மீதுதான் சந்தேகமென ஐஸ்வர்யா தனது புகாரில் தெரிவித்ததையடுத்து, அவரின் பணியாட்களிடம் இருந்து விசாரணையை துவங்கினர்.

தமிழகத்தின் முதல் மிதவை உணவகம் அறிமுகம் - சுற்றுலாத்துறை செயலாளர்

தமிழகத்திலேயே முதன்முறையாக சென்னையையடுத்த செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு பகுதியிலுள்ள ஏரியில் மிதக்கும் உணவகத்தினை தமிழக சுற்றுலாத்துறை அமைக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

வானிலை அறிக்கை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை

மார்ச் 24ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 1,249 கொரோனா பாதிப்புகள்

இந்தியாவில் 1,249 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளது என்றும், செயலில் உள்ள கொரோனா 7,927 ஆக அதிகரித்துள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகக்கோப்பை வென்ற வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடிய பிரதமர்! வைரலாகும் காணொளி!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியை சந்தித்து உற்சாகமாக கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

மத்திய அரசுக்கு எதிரான மனு: ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றசாட்டு

மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாகக் கூறி 14 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன. இந்த வழக்கை ஏப்ரல் 5ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது.

பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதாமல் ஆப்சென்ட்டான 50,000 மாணவர்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழக சட்டப்பேரவையில் பிளஸ்2 பொதுத்தேர்வினை எழுதாமல் ஆப்சென்ட்டான 50,000மாணவர்கள் விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

மற்றுமொரு குட்டி யானையை தத்தெடுத்த 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' தம்பதி

முதுமலையில் இருக்கும் யானை முகாமை அடிப்படையாக கொண்டு எடுக்கபட்ட படம் தான் 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்'.

NEFT, IMPS, RTGS இதில் சிறந்த ஆன்லைன் பணம் பரிமாற்றம் எவை? தெரிந்துகொள்வோம்!

இன்றைய நவீன காலக்கட்டத்தில் வங்கிகளில் ஆன்லைன் பரிவர்த்தனை என்பது மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை எட்டியுள்ளது.

ராகுல் காந்திக்கு எதிராக விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு - காங்கிரஸ்

கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார்.

தங்கம் விலை இன்று ரூ.160 வரை உயர்வு - இன்றைய நாளின் முழு விபரங்கள்

இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.

நயன்தாராவின் டயட் பிளான்கள் பற்றி வெளியான புது தகவல்

கேரளாவில் இருந்து வரும் ஹீரோயின்களுக்கு, தமிழ் ரசிகர்களிடம் எப்போதுமே ஒரு மௌசு உண்டு.

வேங்கைவயல் சம்பவத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்த மனு

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் உள்ள தலித் காலனியில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தக் கோரிய மனுவிற்கு பதில் அளிக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று(மார் 23) உத்தரவிட்டது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியது - அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் நேற்றைய(மார்ச்.,23) அறிக்கையின்படி 86 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பானது உறுதியாகியுள்ளது.

யூரோ கால்பந்து கோப்பை : இரண்டு புதிய சாதனைகளை படைத்த ரொனால்டோ

யூரோ கால்பந்து கோப்பை 2024க்கான தகுதிச் சுற்று போட்டியில் குழு ஜே'வில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடித்ததால் போர்ச்சுகல் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவு

ரிக்டர் அளவுகோலில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஜப்பானின் இசு தீவுகளை வெள்ளிக்கிழமை தாக்கியது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.

ஐபிஎல் 2023 போட்டியை காண ஜியோவின் அசத்தலான 3 ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகளை காண அற்புதமான திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் உட்பட 16.80 கோடி பேரின் தகவல்கள் திருட்டு!

இந்திய ராணுவ வீரர்கள், டெல்லி அரசு ஊழியர்கள் என சுமார் 16.80 கோடி பேரின் தகவல்களை திருடியதாக 9 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டாம் என்பது உச்சநீதிமன்ற முடிவு - மத்திய அமைச்சர் விளக்கம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், கர்நாடகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சையத் நசீர் உசேன், நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக பிராந்திய மொழிகளை பயன்படுத்தாதது குறித்து கேள்வி எழுப்பினார்.

மற்றுமொரு முக்கோண காதல் கதையா? லைக்காவின் புதிய பட அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவாதா நடிக்கும் 'தீராக்காதல்' படத்தின் போஸ்டர் இன்று வெளியானது.

ராகுல் காந்தியின் தகுதி நீக்க பிரச்சனை: டெல்லியில் காங்கிரஸின் மாபெரும் போராட்டம்

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, காங்கிரஸ் கட்சி இன்று(மார் 24) எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

நடிகர் அஜித்தின் தந்தை உடல்நலக்குறைவால் மறைவு; ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் அஜித்குமாரின் தந்தை, திரு.PS .மணி இன்று அதிகாலை இறந்ததாக, அஜித்தின் PRO சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

மார்ச் 24க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃப்ரீ பையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன?!

இந்த வாரம் வெள்ளித்திரைக்கு படங்கள் எதுவும் வெளிவராத நிலையில், ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் படங்கள் என்னென்ன எனப்பார்ப்போமா?

டெல்லிக்கு வந்திருந்த உலக வங்கியின் அடுத்த தலைவர் அஜய் பங்காவுக்கு கொரோனா

உலக வங்கியின் தலைவர் பதவிக்கான வேட்பாளர் அஜய் பங்கா டெல்லி வந்திருக்கும் நிலையில், அவருக்கு கொரோனா இருப்பது வழக்கமான சோதனையின் போது கண்டறியப்பட்டதாக கருவூலத் துறை நேற்று(மார் 23) தெரிவித்துள்ளது.

இன்று சர்வதேச காச நோய் தினம்: இந்த தொற்று நோயின் அறிகுறிகளும்; பாதுகாப்பு முறைகளும்

உலகெங்கிலும், பல மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் தொற்று நோய், இந்த காச நோய்.