
800 கோல்களை அடித்த உலகின் இரண்டாவது கால்பந்து வீரர் : லியோனல் மெஸ்ஸி சாதனை
செய்தி முன்னோட்டம்
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பிறகு 800 தொழில்முறை கோல்களை அடித்த இரண்டாவது கால்பந்து வீரர் என்ற சாதனையை லியோனல் மெஸ்ஸி படைத்துள்ளார்.
பனாமாவுக்கு எதிரான நட்புரீதியான போட்டியில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.
கடந்த டிசம்பரில் பிபா உலகக் கோப்பை 2022 பட்டத்தை வென்ற பிறகு சர்வதேச கால்பந்தில் அர்ஜென்டினாவின் முதல் ஆட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மெஸ்ஸி தொழில்முறை கால்பந்தில் தனது 1,1017வது போட்டியில் 800 கோல்களை எட்டியுள்ளார். இந்த எண்ணிக்கையில் கிளப்களுக்காக 701 கோல்களும் அர்ஜென்டினாவுக்காக 99 கோல்களும் அடங்கும்.
லியோனல் மெஸ்ஸி
கால்பந்து விளையாட்டில் லியோனல் மெஸ்ஸியின் புள்ளி விபரங்கள்
மெஸ்ஸி 2005 இல் அர்ஜென்டினா அணியில் அறிமுகமானார். ஒரு வருடம் கழித்து தனது முதல் கோலை அடித்த மெஸ்ஸி 2006 முதல் 2023 வரை, ஒவ்வொரு காலண்டர் ஆண்டிலும் (18 ஆண்டுகள்) அர்ஜென்டினாவுக்காக கோல் அடித்துள்ளார்.
2022 இல் பிபா உலகக் கோப்பையை வென்றது அவரது சிறந்த தொடராகும்.
அர்ஜென்டினாவுக்காக 2012 மற்றும் 2022 என இரண்டு காலண்டர் ஆண்டுகளில் மெஸ்ஸி 10-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார்.
இதற்கிடையில், 26 ஃபிஃபா உலகக் கோப்பை ஆட்டங்களில், மெஸ்ஸி 13 கோல்களை அடித்துள்ளார்.
இதற்கிடையே மெஸ்ஸி கிளப் போட்டிகளில் 701 கோல்களுடன், இதிலும் ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார்.