Page Loader
மற்றுமொரு முக்கோண காதல் கதையா? லைக்காவின் புதிய பட அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்
'தீரா காதல்' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

மற்றுமொரு முக்கோண காதல் கதையா? லைக்காவின் புதிய பட அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 24, 2023
10:50 am

செய்தி முன்னோட்டம்

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவாதா நடிக்கும் 'தீராக்காதல்' படத்தின் போஸ்டர் இன்று வெளியானது. படத்தின் தயாரிப்பாளரான லைக்கா நிறுவனம், இதை வெளியிட்டது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்படி, இந்த படமும் ஒரு முக்கோண காதல் கதை போன்று தோன்றுகிறது. தமிழ் சினிமாவில் அடித்து துவைத்த கதைக்களம் தான் முக்கோண காதல் என்பது. சமீபத்தில் கூட, ரெண்டு பேர் ரெண்டு காதல் என்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்திருந்தனர். தற்போது அதே பாணியில் ஒரு படமா என ரசிகர்கள் குழம்பியுள்ளனர். இந்த 'தீராக்காதல்' படத்தின் இயக்குனர் 'அதே கண்கள்' புகழ், ரோஹின் வெங்கடேசன். படத்திற்கு இசையமைக்கவிருப்பது சித்து குமார்.

ட்விட்டர் அஞ்சல்

'தீராக்காதல்' படத்தின் போஸ்டர்