ஐஸ்வர்யா வீட்டின் கொள்ளை விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்: காணாமல் போனதோ 60 சவரன்; மீட்கப்பட்டதோ 100 சவரன்!
செய்தி முன்னோட்டம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை போன விவகாரம், சென்னையையே உலுக்கியது எனலாம்.
இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட சென்னை காவல்துறையினர், ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி பெண்மணியை கைது செய்து விசாரித்ததில், ஐஸ்வர்யா வீட்டில் இருந்து நகையை அவர் திருடியுள்ளது தெரியவந்தது.
ஐஸ்வர்யாவின் டிரைவருடன் இணைந்து அவர், திருடிய நகைகளை விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
அதன்படி, அவர் வசம் இருந்த நகைகளை மீட்டபோது, 100 சவரன் நகைகள் கிடைத்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 60 சவரன் நகைகள் திருடப்பட்டது என புகார் தெரிவித்த நேரத்தில், 100 சவரன் எங்கிருந்து வந்தது எனக்குழம்பி பொய் இருக்கிறார்கள் காவல் துறையினர்.
இது குறித்து ஐஸ்வர்யாவிடமும் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ட்விட்டர் அஞ்சல்
புகாரை விட கூடுதலாக சிக்கிய நகைகள்
Twist 👀#aishwaryadhanush #aishwaryarajinikanth #MadrasDiaries #majapostu #mokkapostu pic.twitter.com/BSSfSjLBUn
— Madras Diaries (@MadrasDiariesMD) March 24, 2023