Page Loader
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்?
ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை போன விவகாரத்தில் மூன்றாவது நபர் சிக்கியுள்ளார்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 24, 2023
02:47 pm

செய்தி முன்னோட்டம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அந்த வழக்கில் தனது வீட்டில் வேலை செய்பவர்கள் மீதுதான் சந்தேகமென ஐஸ்வர்யா தனது புகாரில் தெரிவித்ததையடுத்து, அவரின் பணியாட்களிடம் இருந்து விசாரணையை துவங்கினர். அதில், அவர் வீட்டில் வேலை செய்யும் ஈஸ்வரி என்ற பெண் தான் திருட்டில் ஈடுபட்டதாக தெரிகிறது. அவரும், ஐஸ்வர்யா வீட்டின் டிரைவரும் இணைந்து, நகைகளை திருடி விற்றுவிட்டதாகவும், அதை வைத்து சோழிங்கநல்லூரில் மனை வாங்கி இருப்பதும் அம்பலம் ஆகி உள்ளது. இந்நிலையில், ஈஸ்வரியிடமிருந்து கிட்டத்தட்ட 100 சவரன் நகைகள் மீட்கப்பட்டதாக தெரிகிறது. ஈஸ்வரி மற்றும் அவரது கூட்டாளியிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்கிய குற்றத்துக்காக, மைலாப்பூரை சேர்ந்த சங்கர் நவாலி என்பவரையும் கைது செய்துள்ளது போலீசார்.

ட்விட்டர் அஞ்சல்

மூன்றாவது நபர் கைது