Page Loader
நடிகர் அஜித்தின் தந்தை உடல்நலக்குறைவால் மறைவு; ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகர் அஜித்தின் தந்தை மரணம்

நடிகர் அஜித்தின் தந்தை உடல்நலக்குறைவால் மறைவு; ரசிகர்கள் அதிர்ச்சி

எழுதியவர் Venkatalakshmi V
Mar 24, 2023
10:16 am

செய்தி முன்னோட்டம்

நடிகர் அஜித்குமாரின் தந்தை, திரு.PS .மணி இன்று அதிகாலை இறந்ததாக, அஜித்தின் PRO சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, அஜித்தின் தந்தை பல நாட்களாக பக்கவாதத்தினால் நோய் வாய்பட்டிருந்ததாகவும், இன்று அதிகாலை, தூக்கத்தில் அவர் உயிர் பிரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 85 . அவரின் மறைவை, ஒரு குடும்ப நிகழ்வாக, தனிப்பட்ட முறையில் செய்ய விருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்திற்கு அனுப்குமார் மற்றும் அனில்குமார் என்ற இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் மூவரும் தங்கள் தந்தையின் இறுதி சடங்கை மேற்கொள்வார்கள் எனக்கூறப்பட்டுள்ளது. அதேபோல, அவரின் இறுதி சடங்கு எங்கு நடைபெறவிருக்கிறது என்பது பற்றியும் தகவல் இல்லை.

ட்விட்டர் அஞ்சல்

நடிகர் அஜித்தின் தந்தை மறைவு