
கடலுக்கு நடுவில், உல்லாச படகில், ஒய்யாரமாக 'தல' அஜித்தும் ஷாலினியும்: வைரலாகும் புகைப்படங்கள்
செய்தி முன்னோட்டம்
சமீபத்தில் சோஷியல் மீடியாவிற்கு என்ட்ரி ஆன நடிகை ஷாலினி, அவ்வப்போது, தனது குடும்பத்தினர் புகைப்படங்களை பகிர்வதுண்டு. அதில், அஜித்குமாரின் புகைப்படங்கள் வெளியானால், தல ரசிகர்கள் சும்மா இருப்பார்களா?
தற்போது, அஜித்தும், ஷாலினியும், தங்களது குழந்தைகளுடன், துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அதன் புகைப்படங்கள் சிலவற்றை, ஷாலினி நேற்று பகிர்ந்துக்கொண்டார்.
பறந்து விரிந்த கடலுக்கு நடுவே, தனது காதல் கணவரான அஜித்துடன், ஒய்யாரமாக போஸ் தருகிறார் ஷாலினி. மறுபுறம் அஜித், எப்போதும் போல சிம்பிள் உடையிலும், ஸ்டைலிஷ்-ஆக இருக்கிறார்.
'துணிவு' படத்திற்கு பிறகு, அஜித் நடிக்கவிருக்கும் 'AK-62' படம் குறித்த அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகாத நிலையில், தங்கள் ஹீரோவின் தரிசனமாவது கிடைத்ததே என்று 'தல' ரசிகர்கள், அந்த புகைப்படங்களை ஆவலுடன் பகிர்ந்து வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
அஜித்-ஷாலினியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
#Ajithkumar #Shalini recent pics from Dubai #AK pic.twitter.com/UVWQOI8EeJ
— sridevi sreedhar (@sridevisreedhar) March 20, 2023